செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சி.. போலீசாரை அலற விட்ட இளைஞர்!

 
கோவிந்தசாமி 

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குனிச்சி பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் கடந்த சுமார் 13வருடங்களுக்கு முன்பு பெங்களூரில் திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்டதாக வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனையெடுத்து கடந்த 18ஆம் தேதி புதன்கிழமை பெங்களூர் போலீசார் கந்திலி போலீசாரின் துணையுடன் கோவிந்தசாமியை பிடித்து சென்று உள்ளனர்.

பின்னர் மூன்று நாட்களில் ஜாமினில் சுமார் 3.50லட்சம் ரூபாய் செலவு செய்து வெளியே வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கோவிந்தசாமி  பெங்களூர் போலீசாரிடம் கந்திலி போலீசார் எழுத்து பூர்வமாகவோ அல்லது எந்தவொரு ஆதாரமோ இல்லாமல் அனுப்பி வைத்ததாக கூறி இன்று திடீரென குனிச்சி பகுதியில் உள்ள செல்போன் டவர் மீது பெட்ரோல் மற்றும் கயிறுயுடன் ஏறி  கந்திலி போலீசாரை  கண்டித்து தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டார்.

இதனை அறிந்த திருப்பத்தூர் தீயணைப்பு துறையினர் மற்றும் கந்திலி போலீசார் கீழே இறங்குமாறு அறுவுறுத்தினர். ஆனால் கோவிந்தசாமி  திருப்பத்தூர் டிஎஸ்பி, மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்த பிறகே தான் கீழே இறங்குவேன் இல்லை எனில் தற்கொலை செய்து கொள்வேன் என கூறினார்.

பின்னர் போலீசார் சமாதான பேச்சுவார்த்தையைடுத்து தீயணைப்பு துறையினர் கோவிந்தசாமியை 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு  மீட்டனர். இச்சம்பவம் குறித்து கந்திலி போலீசார் கோவிந்தசாமியிடம் விசாரணை செய்த நிலையில் நாளை காலை கந்திலி காவல் நிலையத்தில் ஆஜர் ஆகும்படி அறிவுறித்தி சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web