வாட்ஸ் அப் பயனர்களே உஷார்!! இந்த நம்பரிலிருந்து கால் வந்தா எடுக்காதீங்க!!

 
வாட்ஸ் அப்

தகவல் பரிமாற்ற செயலிகளில் கோடிக்கணக்கான பயனர்களை பெற்று முண்ணனியில் இருந்து வருவது வாட்ஸ் அப் செயலி தான். வாட்ஸ் அப் தனது பயனர்களை தக்க வைக்கவும், அவர்களுக்கான வசதியை மேம்படுத்தும் வகையில் அவ்வப்போது புதுப்புது அப்டேட்களை வழங்கி வருகிறது. அதே நேரத்தில் அதில் மோசடிகளும் அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.  இரவு கண் விழித்து கொள்ளையடித்த காலம் எல்லாம் மலையேறி விட்டது. உட்கார்ந்த இடத்தில் இருந்தே தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியை பயன்படுத்தி மோசடி பேர் வழிகள்  ஹைடெக்  டெக்னாலஜி முறையில் கொள்ளையடித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்

உட்கார்ந்த இடத்தில் இருந்து எப்படியெல்லாம் பணத்தை சுருட்டமுடியுமோ அப்படி சுருட்டுகிறார்கள். உங்களுடைய மொபைல் எண்ணுக்கு கோடி ரூபாய் பரிசு.  அதற்கான வரியை செலுத்தினால் மட்டும் போதும். அந்த பணம் உங்களுக்கு கிடைத்துவிடும் என வாடிக்கையாளர்களை நம்ப வைத்து ஏமாற்றுப்பேர்வழிகள்  திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  லிங்கை அனுப்பி இதை கிளிக் செய்தால் இத்தனை கோடி பணம் கிடைக்கும் என்பார்கள்.  இந்த எண்ணுக்கு மெசேஜ் அனுப்பினால் பார்ட் டைம் வேலை வாய்ப்புகள். தினசரி ரூ20000 சம்பாதிக்கலாம் என்பார்கள். ஆனால் இவையற்றை எல்லாம் கிளிக் செய்தால் நம் வங்கிக் கணக்கில் கஷ்டப்பட்டு  சேர்த்து வைத்திருக்கும் பணம் அபேஸ்.  இவர்களை விரைந்து பிடிப்பதற்காக சைபர் க்ரைம் போலீசார் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.  

ஏதாவது ஒரு வெளிநாட்டு எண்ணில் இருந்து வரும் அழைப்பில் குறைந்தபட்ச கட்டணத்தில் மசாஜ் செய்வார் என தகவல் வரும். அதில் கொடுக்கப்பட்ட எண்ணிற்கு கால் செய்தால் அந்த காலில் ஒரு அழகி நிர்வாணமாக இருப்பார். பின்னணியில் ஒரு கும்பல் அந்த அழகியையும் போன் செய்த நபரையும் ரெக்கார்டு செய்து, உடனே கட் செய்துவிடும்.  இந்த வீடியோவை ரிலீஸ் செய்துவிடுவதாக அந்த நபரை மிரட்டி பணம் பறிக்க தொடங்கும்.  இதே போல் வாட்ஸ் ஆப்களிலும் அதிக மோசடி நடைபெறுகிறது.  வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு வந்த புகாரின் படி மக்களுக்கு சர்வதேச எண்களில் இருந்து அழைப்புகள் வருகின்றன.

வாட்ஸ் அப்

அதாவது எத்தியோபிா (+251), மலேசியா (+60), இந்தோனேசியா (+62), கென்யா (+254), வியட்நாம் (+84) மற்றும் பிற நாடுகளிலிருந்து வருகிறது. இந்த அழைப்புகள் வேறு நாட்டு குறியீட்டிலிருந்து வந்தாலும் அது உண்மையில் அந்த நாட்டிலிருந்து வருவது கிடையாது.  தெரியாத எந்த சர்வதேச அழைப்புகளுக்கும் பதில் அளிக்காமல் இருப்பதே உங்கள் பணத்திற்கு உத்திரவாதம்.   நீல நிறத்தில் அழைப்புகள்  தோன்றினால் அந்த அழைப்பை தவிர்த்து விடுங்கள்.  இந்த காலை அட்டென்ட் செய்தால் உங்கள் தனிப்பட்ட விவரங்களை பெற்று பணத்தை திருடும் மோசடிக்கும்பல் கையில் சிக்கிக் கொள்வீர்கள். பகுதி நேர வேலைவாய்ப்புகளுக்கு முன்பணமாக ஒரு கட்டணத்தை செலுத்த சொல்லி வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் வரும். தையும் நம்பி பணம் செலுத்திவிட்டு ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கின்றனர் சைபர் க்ரைம் போலீசார்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web