AdBlock செய்தால் ஆடியோ கட்... யூடியூப் நிறுவனம் திடீர் அறிவிப்பு.. பயனர்கள் அதிர்ச்சி!
Youtube களில் ஷார்ட்ஸ் பார்ப்பது தான் பலரது பொழுதுபோக்கே. நீளமான வீடியோக்களில் நடுவில் விளம்பரங்கள் வந்து தொல்லை படுத்தும். இதனை தவிர்க்க சிலர் விளம்பரத்தை ஸ்கிப் செய்வர். மேலும் சிலர் அடுத்தகட்ட நடவடிக்கையாக AdBlockerஐ பயன்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு யூடியூப் நிறுவனம் அதிரடி ஆப்பை வைத்துள்ளது. அதன்படி AdBlocker பயன்படுத்தும் பயனர்களுக்கான வீடியோக்களில் ஆடியோ வசதியை துண்டிக்க ஆரம்பித்துள்ளது.

இதனால் AdBlocker பயன்படுத்தும் பயனர்கள் ஆடியோ இல்லாமல் தான் வீடியோக்களை பார்க்க முடியும். இனியாவது ஆட் பிளாக் பயனர்கள் யூடியூபின் கட்டுப்பாடுகளுக்கு இணங்கி யூடியூப் செயலியை பயன்படுத்த வேண்டும் என அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக ஆட்பிளாக்கர்களை பயன்படுத்தும் பயனர்கள் முழுமையாக வீடியோக்களை பார்ப்பதற்கு வழியின்றி யூடியூப் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
