ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி....சுருண்ட் பாகிஸ்தான்!!

 
ஆஸ்திரேலியா பாகிஸ்தான்

13வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். 

ஆஸ்திரேலியா பாகிஸ்தான்
இந்த தொடரில் இன்று நடைபெற்ற 18வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர், மார்ஷ் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 
பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய இந்த இணை மைதானத்தில் நாலாபுறமும் சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தியது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் அடித்து அசத்தினர். இந்த ஜோடி முதலாவது விக்கெட்டுக்கு 259 ரன் எடுத்த நிலையில் மார்ஷ் 121 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களம் இறங்கிய மேக்ஸ்வெல் ரன் எதுவும் எடுக்காமலும், ஸ்மித் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வார்னர் 163 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து மார்கஸ் ஸ்டோனிஸ், ஜோஷ் இங்க்லிஸ் ஜோடி சேர்ந்தனர். இதில் இங்க்லிஸ் 13 ரன், ஸ்டோனிஸ் 21 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து மார்னஸ் லபுஸ்சேன் மற்றும் பேட் கம்மின்ஸ் ஜோடி சேர்ந்தனர்.இறுதியில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 367 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் அப்ரிடி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 368 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி ஆடியது.

ஆஸ்திரேலியா பாகிஸ்தான்
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய அப்துல்லா 64 ரன், இமாம் 70 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து களம் இறங்கிய பாபர் ஆசம் 18 ரன், ரிஸ்வான் 46 ரன், சவூத் சகீல் 30 ரன், இப்டிகார் 26 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் பாகிஸ்தான் அணி 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 305 ரன்கள் எடுத்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா அணி 62 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி பெற்ற 2வது வெற்றி இதுவாகும்

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web