தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கையெழுத்துப் போட்டி…. பரிசுகளும், பாராட்டு சான்றிதழும்... முழு தகவல்கள்

 
கையெழுத்து
 

!  
 

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வித்தரத்தை அரசு பள்ளி மாணவர்களிடையே கொண்டு வர தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் தமிழ் கையெழுத்துப் போட்டிகள் நடத்தப்பட்டு ரொக்க பரிசுகள் வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

மாணவிகள்

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செய்திக்குறிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில்  பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் தமிழ் மொழியை அழகாக எழுதி வருபவர்களை ஊக்குவிக்கவும் மற்ற மாணவர்களுக்கு தமிழில் அழகாக எழுதும் ஆர்வத்தை ஏற்படுத்தவும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவில் தமிழ் கையெழுத்து போட்டிகள் நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு  பரிசுகளும்,   பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படும்.

மாணவிகள்
ஒவ்வொரு மாவட்டத்திலும் 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கையெழுத்து போட்டிகள் நடத்தப்பட்டு முதல் பரிசாக ரூ 3000, 2ம் பரிசாக ரூ2000ம், 3ம் பரிசாக ரூ1000மும் வழங்கப்படும்.   அதனைப் போலவே 10 முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ4000மும், 2ம் பரிசாக ரூ3000மும், 3ம் பரிசாக ரூ2000மும்  வழங்கப்படும். ஜூலை 31ம் தேதிக்குள் தமிழக முழுவதும் போட்டிகளை நடத்தி முடிக்க அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web