ஆவணி பொங்கல் திருவிழா... மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்!

 
மாட்டு வண்டி எல்கை

தூத்துக்குடி மாவட்டம்  விளாத்திகுளம் அருகே ஆவணி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பி. வெங்கடேஸ்வராபுரம் கிராமத்தில் காளியம்மன், அய்யனார், கருப்பசாமி திருக்கோவில் ஆவணி மாத பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 2-ம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. சின்னமாடு, பூஞ்சிட்டு, தேன் சிட்டு என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன.

சிவகங்கை மாட்டு வண்டி

திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 42 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. பந்தய சாலை குறுகலாக இருந்தாலும் மாட்டு வண்டி சாரதிகள் மற்றும் பின்சாரதிகள் வெற்றி இலக்கை நோக்கி நேர்த்தியாக மாட்டு வண்டிகளை ஒட்டிய காட்சிகள் மாட்டு வண்டி பந்தைய ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்தது.

மாட்டுவண்டி எல்கை பந்தயம்

இந்த மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை புதூர் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவருமான தனஞ்செயன், அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப தலைவர் மோகன் மற்றும் விழாக்கமிட்டியினர் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டியின் சார்பாக பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?