வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல்... கேரளாவில் இருந்து வரும் கோழி, வாத்து, முட்டைகளுக்கு தடை எல்லையில் கண்காணிப்பு தீவிரம்!

 
கோழி காய்ச்சல்

 இந்தியாவின் பல பகுதிகளில் வெயில் கொளுத்தி வருகிறது. கடவுளின் தேசமான கேரளாவில் பறவைக் காய்ச்சல் காரணமாக கொத்து கொத்தாக கோழிகள், வாத்துக்கள் மடிகின்றன. இதனையடுத்து தமிழக கேரள எல்லையில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  மற்றொரு புறம் கேரளா  ஆலப்புழா மாவட்டம் குட்டநாட்டில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள  வாத்துகள், கோழிகள் மற்றும் காடை போன்ற பறவையினங்களை அம்மாநில சுகாதாரத் துறை அழித்து வருகிறது.  அப்பகுதியில் இருந்து வாத்து மற்றும் கோழிகளை வெளியே எடுத்துச் செல்லவும், இறைச்சி மற்றும் முட்டைகளை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல், தமிழகத்திற்குள் வராமல் தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பறவைக் காய்ச்சல்

இதன் ஒரு பகுதியாக தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடியில்  கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் தீவிர சோதனை நடத்திய பிறகே தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுகிறது. இந்த  கோழி தொடர்பான பொருட்கள் கொண்டு வரப்படுகிறதா என்பதை குறித்து தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. த்து வருகின்றனர்.   வாத்து, கோழி, முட்டை, கோழித் தீவனங்களுடன் வரும் வாகனங்கள்  திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.  காய்கறி போன்ற மற்ற வகையான  உணவு பொருட்களை ஏற்றி வரும் அனைத்து கனரக, இலகுரக வாகனங்களும் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றன.   வாகனம் முழுவதும்  பறவை காய்ச்சல் நோய் கிருமிகளை அழிக்கும்  கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இந்தப் பணியில் ஒரு கால்நடை உதவி ஆய்வாளர், ஒரு கால்நடை பராமரிப்பு உதவியாளர், கிருமி நாசினி தெளிப்பவர்கள் இருவர் என  4 பேர் கொண்ட குழுவினர் 24 மணி நேரமும் 2 ஷிப்டுகளாக பணி புரிந்து வருகின்றனர்.

பறவை காய்ச்சல்

 அதே போல்   கேரளாவில் இருந்து குமரிக்கு இறைச்சி கோழி, முட்டை கொண்டு வரும் வாகனங்களில் கிருமிநாசினி தெளிக்கவும்  களியக்காவிளையில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. படந்தாலுமூடு பகுதியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.  
நாமக்கல் கேரளாவில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,  நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. நாமக்கலில் 1000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில்  கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.  

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web