ஆவினில் ரூ.10க்கு பாதாம் மிக்ஸ் பவுடர் பாக்கெட் அறிமுகம்!

 
பாதாம் பவுடர் மிக்ஸ்
 


கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆவினில் பாதாம் மிக்ஸ் பவுடர் பாக்கெட் ரூ.10 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.!

கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் ஏற்கனவே பாதாம் மிக்ஸ் பவுடர் 200 கிராம் ஜார்களில் உற்பத்தி செய்யப்பட்டு மாதம் ஒன்றுக்கு சுமார் 30000 ஜார்களுக்கு மேலாக உள்ளு+ர் விற்பனை, தலைமை அலுவலகத்திற்கும் தமிழ்நாட்டிலுள்ள பிற ஒன்றியங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பாதாம் பவுடர்

மேற்படியான பாதாம்மிக்ஸ் பவுடருக்கு வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருவதால் நுகர்வோர்கள் அனைவரும் எளிதில் பயன்படுத்தும் வகையில் தற்போது சிறியளவில் 14பஅ பாதாம் மிக்ஸ் பவுடர் பாக்கெட் ரூ.10.00 அதிகபட்ச சில்லறை விற்பனை விலையில் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் முன்னிலையில் 26.08.2025 முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.

ஆவின்

பொதுமக்கள் இதுவரை எங்கள் ஒன்றியத்திற்கு அளித்து வரும் ஆதரவினை தொடர்ந்து வழங்குமாறு கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?