அசத்தல் !! நீரஜ் சோப்ரா மீண்டும் தங்கம் வென்று சாதனை!! மோடி வாழ்த்து!!

 
நீரவ் சோப்ரா

இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா. இவர் 2020ல் டோக்கியோவில் நடைபெற்ற  ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்றவர். தற்போது தோஹா டயமண்ட் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மீண்டும்   நீரஜ் சோப்ரா, தனது திறமையை நிரூபித்துள்ளார்.  இவருக்கு வயது 25. கத்தாரில் தோஹா டையமண்ட் லீக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டு தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.  2022 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா, நடப்பு ஆண்டில் தங்கப்பதக்கத்தை தட்டி பறித்துள்ளார்.  


இந்நிலையில் நீரஜ் சோப்ரா 88.67 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதல் இடத்தைப் பிடித்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார். ஜேக்கப் வேட்லக் 88.63 மீட்டர் தூரம் வீசி இரண்டாவது இடத்தையும், கிரெனடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 85.88 மீட்டர் தூரம் வீசி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்நிலையில், தங்கம் பதக்கம் தட்டி சென்ற நிலையில் நீரஜ் சோப்ரா பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
செப்டம்பரில் சுவிட்சர்லாந்தில் நடந்த 2022 டயமண்ட் லீக் பைனல்சிலும் கோப்பையை கைப்பற்றி பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் பெற்றார். நீரஜ் சோப்ராவின் வெற்றிக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ” நீரஜ் சோப்ரா இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். நாட்டை மீண்டும் பெருமைப்படுத்திய உண்மையான சாம்பியன். இந்த அற்புதமான வெற்றிக்கு வாழ்த்துக்கள் நீரஜ்” என பதிவிட்டுள்ளார். 



டயமண்ட் லீக் கூட்டத்தில் சோப்ராவின் இரண்டாவது வெற்றி இதுவாகும். கடந்த ஆண்டு லொசானில் நடந்த டயமண்ட் லீக் கூட்டத்தில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். வெற்றிக்குப் பிறகு நீரஜ் சோப்ரா ” இது மிகவும் கடினமான வெற்றி. ஆனால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இது எனக்கு ஒரு நல்ல தொடக்கம். இது அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் சவாலாக இருந்தது. அற்புதமான சூழல் அது. இன்று சவாலாக இருந்தது. அடுத்த முறை இன்னும் சிறப்பாக செய்வேன். நிறைய பேர் எனக்கு ஆதரவாக வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.  நீரஜ் முதல் முயற்சியிலேயே 88.67 மீட்டர் ஈட்டியை எறிந்தார். 
முதல் முறை - 88.67 மீட்டர் தூரம்.
இரண்டாவது முறை - 86.04 மீட்டர் தூரம்
மூன்றாவதாக முறை - 85.47 மீட்டர் தூரம்.
நான்காவது முறை - தோல்வி.
ஐந்தாவது முறை - 85.37 மீட்டர் தூரம்.
ஆறாவது முறை - 86.52 மீட்டர் தூரம்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web