பகீர் வீடியோ... நடுரோட்டில் 11ம் வகுப்பு மாணவர் 14 முறை கத்தியால் குத்திக் கொலை!

 
அன்ஷுல்

ஹரியாணா மாநிலம், பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள  சந்தையில் 11ம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவரை  கத்தியால் அடுத்தடுத்து கொடூரமாக 14 முறை குத்திக் கொலைச் செய்ததாக 10 பேர் கொண்ட கும்பலைப் போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர். இது குறித்த சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பதைபதைக்க செய்கிறது. 

கத்தியால் குத்திக் கொலைச் செய்யப்பட்ட அன்ஷுல் எனும் மாணவரின் குடும்பத்தினர் போராட்டங்களை நடத்தினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது போலீசார் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குடும்பத்தினர் புகார் தெரிவித்து போராட்டம் நடத்தினர். 

இது குறித்து மாணவர் அன்ஷுலின் சகோதரி அஞ்சலி கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு குற்றம் சாட்டப்பட்டவருடன் தனது சகோதரர் அன்ஷுல் வாக்குவாதம் செய்ததாகவும், அவர்கள் சந்தைக்குச் சென்றபோது, ​​குற்றம் சாட்டப்பட்ட ஹிமான்ஷு மாத்தூர் மற்றும் ரோஹித் தாமா மேலும் சிலருடன் சேர்ந்து அன்ஷுலை கட்டையாலும், கத்தியாலும் தாக்கியதாக கூறினார். 

இதைப் பார்த்த அஞ்சலியும், அந்த பகுதியில் இருந்த உள்ளூர் மக்களும் உடனடியாக ஓடிச் சென்று அன்ஷுலுக்கு உதவி செய்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். எனினும் சிகிச்சைப் பலனளிக்காமல் அன்ஷுல் பரிதாபமாக உயிரிழந்தார். அன்ஷூல் கொடூரமாக 14 முறை கத்தியால் குத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

போலீசார்

அன்ஷூலின் நண்பர் அன்மோல், குற்றம் சாட்டப்பட்டவர் பஸ்லேவ காலனியில் ரவுடித்தனம் செய்வதாகவும், போதைப்பொருள் விற்பனை செய்வதாகவும் காவல்துறையிடம் தெரிவித்தார். அப்பகுதியில் உள்ள பெண்களிடம் அடிக்கடி தவறாக நடந்து கொள்வதாகவும் புகார் கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, குற்றம் சாட்டப்பட்டவருடன் அன்ஷுல் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. 

இதற்கான பழிவாங்கும் முயற்சியில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அன்ஷுலைக் கொலைச் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. உயிரிழந்த அன்ஷூலின் சகோதரி அஞ்சலி கொடுத்த புகாரின் அடிப்படையில்  எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, மாத்தூர், தாமா உட்பட 10 பேர் கொண்ட கும்பலைப் போலீசார் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web