அயோத்தி ராமர் கோவில் தியாகம் மற்றும் போராட்டத்தின் மூலம் கட்டப்பட்டது... பிரதமர் மோடி முதலாம் ஆண்டு நிறைவு நாளுக்கு வாழ்த்து!

 
அயோத்தி ராமர் கோவில்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அயோத்தி ராமர் கோவில் பல நூற்றாண்டு காலங்களுக்கு பிறகு மீண்டும் கட்ட்டப்பட்டு தற்போது ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து பல்வேறு சிறப்பு வழிபாடுகள் ஆராதனைகளுக்கு கோவில் நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து பிரதமர் மோடி அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை தியாகம் மற்றும் போராட்டத்தின் மூலம் கட்டப்பட்டது என தெரிவித்துள்ளார்.  

அயோத்தியில் ராமர் கோவில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதன் முதலாம் ஆண்டு விழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "அயோத்தியில் குழந்தை ராமரின் சிலை பிரதிஷ்டையின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

அயோத்தி

பல நூற்றாண்டு கால தியாகம், தவம் மற்றும் போராட்டத்தின் மூலம் கட்டப்பட்ட இந்த கோவில், நமது கலாசாரம் மற்றும் ஆன்மிகத்தின் ஒரு சிறந்த பாரம்பரியமாகும். வளர்ந்த இந்தியா என்ற தீர்மானத்தை அடைவதற்கு இந்த தெய்வீக மற்றும் பிரமாண்டமான ராமர் கோவில் ஒரு சிறந்த உத்வேகமாக மாறும் என்று நான் நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web