ராம நவமி ஸ்பெஷல்...அயோத்தி ராமர் நெற்றியில் சூரிய ஒளி... பக்தர்கள் பரவசம்!

 
அயோத்தி

 உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராம ஜென்ம பூமியில் ராமர் கோவில் நிறுவப்பட்டது. ஜனவரி 21ம் தேதி கும்பாபிஷேகம் விமரிசையாக நடத்தப்பட்டது. உலகம் முழுவதும் இருந்து பல்வேறு ஆன்மிகவாதிகள், அரசியல் தலைவர்கள்கலந்து கொண்டனர்.  இந்த கோவிலில் தினமும் லட்சக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று ராம நவமி  உலகம் முழுவதும் விஷ்ணு பக்தர்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. ராமரின் பிறப்பை குறிக்கும் ராம நவமி முதன்முறையாக புதிய ராமர் கோயிலில் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு, பால ராமரின் 'சூரிய அபிஷேகம்' நிகழ்வு மிகவும் சிறப்புவாய்ந்தது. அதாவது இன்று பிற்பகலில்  சூரியனின் கதிர்கள் ராமர் சிலையின் நெற்றியில் விழும் வகையில் கோவில் வடிவமைக்கப்பட்டு ராம் லல்லா சிலை நிறுவப்பட்டுள்ளது.
 ராம நவமி அன்று அயோத்தியில் குழந்தை ராமருக்கு ‘சூரிய அபிஷேகம்’ அல்லது ‘சூரிய திலகம்’ என்ற அரிய  நிகழ்வு நடைபெறும். ராமரின் நெற்றியில் சூரியனின் கதிர்கள் விழும் நிகழ்வை காண பக்தர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். 

அயோத்தி ராமர்


குழந்தை ராமருக்கு இன்று பிற்பகலில் 'சூர்யா அபிஷேகம்' பரிசாக வழங்கப்படும் என பக்தர்கள் பரவசத்துடன்  எதிர்பார்த்துள்ளனர். இந்நிகழ்வின் மூலம்  சூரியக் கதிர்கள் தொடர்ச்சியான ஆப்டிகல் கருவி மூலம் திசை திருப்பப்படும். சூரியக் கதிர்கள் ராமரின் நெற்றியில் பிரகாசிக்கும். தொடர்ந்து 4  நிமிடங்களுக்கு 75 மில்லிமீட்டர்கள் வரை வட்ட வடிவில் திலகம் போல பால ராமரின் நெற்றியில் சூரிய ஒளி படும். " ராமர் சிலையின் நெற்றி மையத்தில் திலகத்தின் சரியான காலம் சுமார் மூன்று முதல் மூன்றரை நிமிடங்கள் நீடிக்கும். அதில் 2 முழு நிமிடங்கள் முழு வெளிச்சம் இருக்கும்" என என  CSIR-CBRI ரூர்க்கியின் விஞ்ஞானி டாக்டர் எஸ் கே பானிக்ராஹி கூறியுள்ளார்.  
 ஏப்ரல் 19ம் தேதிக்கு பிறகு குழந்தை ராமரை தரிசனம் செய்ய சிறப்பு விருந்தினர்கள் அயோத்திக்குச் செல்ல வேண்டும் என ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அழைப்பு  விடுத்துள்ளது. ஏப்ரல் 16 மற்றும் 18 க்கு இடையில் ராமரின் தரிசனம் மற்றும் ஆரத்திக்கான அனைத்து சிறப்பு பாஸ் முன்பதிவுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.  ராமர் கோவிலுக்குள் நுழைய மற்ற பக்தர்கள் செல்லும் பாதையை மட்டுமே அனைவரும் பின்பற்ற வேண்டும் என அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அயோத்தி ராமர்
இந்த ஏற்பாடுகள் குறித்து ஸ்ரீ ராமர் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை உறுப்பினர் அனில் மிஸ்ரா  , “சூரிய திலகத்தின் போது, ராமர் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ராம நவமி கொண்டாட்டங்களைக் காட்டும் வகையில் கோயில் அறக்கட்டளையால் சுமார் 100 எல்இடிகளும், அரசாங்கத்தால் 50 எல்இடிகளும் வைக்கப்பட்டுள்ளன.   
தரிசனத்தின் போது ஏற்படும் இடையூறு மற்றும் நேர விரயத்தைத் தவிர்க்க, பக்தர்கள் தங்கள் மொபைல் போன்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை கொண்டு வர வேண்டாம் என  அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பக்தர்களுக்கான சேவை மையம்  நிறுவப்பட்டுள்ளது. அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் ராமர் கோவில் ராம நவமி கொண்டாட்டங்கள் நேரடியாக ஒளிபரப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!