பால் பாக்கெட்களில் ஆயுத பூஜை , சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்!
தமிழகம் முழுவதும் ஆவின் நிறுவனத்தின் மூலம் தரமான பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு பயன்தரும் வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தினமும் 25 லட்சம் லிட்டருக்கும் மேல் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தலைநகர் சென்னையில் மட்டும் 13 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 5 லட்சம் பேர் ஆவின் அட்டைதாரர்களாக இருந்து வருகின்றனர். ஆவின் நிறுவனத்தினால் பால் மட்டுமின்றி தயிர், வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம்கள், இனிப்பு மற்றும் கார வகைகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஒவ்வொரு பண்டிகை நாட்களிலும் ஆவின் விநியோகிக்கும் பால் பாக்கெட்டுகளில், நுகர்வோருக்கு வாழ்த்து சொல்லும் வாசகங்கள் அச்சடிக்கப்படுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில், ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நுகர்வோர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் வாழ்த்து வாசகம் அச்சிடப்பட்டு பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
