சபரிமலை பக்தர்களுக்காக ”அய்யன்” செயலி...

 
சபரிமலை

சபரிமலை ஐயப்பன் கோயில்  உலகப் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர்.  இந்நிலையில் ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் வகையில், பெரியார் வனவிலங்கு சரணாலய மேற்கு பிரிவின் தலைமையில் ‘அய்யன்’ என்ற மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த செயலியில் பம்பை, சன்னிதானம், சுவாமி அய்யப்பன் ரோடு, பம்பை-நீலிமலை-சன்னிதானம், எருமேலி-அழுதகடவு-பம்பை, சத்திரம்-உப்புபாறை-சன்னிதானம் வழித்தடங்களில் அமைந்துள்ள சேவைகளை இந்த செயலி மூலம் அறிந்து கொள்ளலாம்.  

சபரிமலை

மேலும் இதன் மூலம் வனப்பாதையில் உள்ள சேவை மையங்கள், மருத்துவ அவசர சிகிச்சைப் பிரிவு, தங்குமிடம், யானைப் படைக்குழு, பொதுக்கழிவறைகள், ஒவ்வொரு தளத்திலிருந்து சன்னிதானம் வரையிலான தூரம், தீயணைப்புப்படை, காவல் உதவி நிலையம், சுற்றுச்சூழல் கடை, இலவச குடிநீர் விநியோக மையங்கள் மற்றும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கான தூரம் குறித்த தகவல்கள் அனைத்துமே இடம் பெற்றுள்ளன.  அய்யன் மொபைல் செயலியை பம்பை ஸ்ரீராம சகேதம் ஆடிட்டோரியத்தில் கேரள வனத்துறை அமைச்சர் சசீந்திரன் நேற்று மாலை தொடங்கி வைத்தார்.

ஐயப்பன் சபரிமலை இருமுடி


இது குறித்து அமைச்சர் சசீந்திரன்  ‘ அய்யன்’ செயலியில் ஐயப்ப பக்தர்கள் பின்பற்றவேண்டிய ஆசாரம் மற்றும் பொதுவான வழிகாட்டுதல்கள், பெரியாறு வனவிலங்கு சரணாலயத்தின் வளம் மற்றும் சபரிமலை கோயில் பற்றிய தகவல்கள்  அமைந்துள்ளன. இதனை  கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நிறுவக்கூடிய ‘அய்யன்’ செயலி, மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி  மொழிகளில் கிடைக்கிறது.  வனப்பாதையின் வாயில்களில் உள்ள க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலமும் இந்த பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்யலாம்.ஆபத்து மற்றும்  அவசர காலங்களில் தொடர்பு கொள்ள அவசர உதவி எண்களும் இதில் அமைந்துள்ளன. செயலி பயன்பாடு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் வேலை செய்யும்’’ என தெரிவித்துள்ளார்.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web