பாலியல் வழக்கு... ரூ.100 கோடி சொத்து... 21 ஏக்கரில் சொகுசு பங்களா... பகீர் கிளப்பும் சாமியார் போலே பாபா!

 
போலே பாபா

உத்தரபிரதேசத்தில் சாமியார் போலே பாபாவின் கால் மண்ணை எடுக்க லட்சக்கணக்கான மக்கள் திரண்ட போது நெரிசலில் சிக்கி 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த போலே பாபா யார் என்பதையும், அவருடைய சொற்பொழிவைக் கேட்க பெண்கள் எப்படிக் குவிந்தார்கள் என்பதையும் பார்ப்போம்.

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் அருகே உள்ள பகதூர் நகரை சேர்ந்தவர் சூரஜ் பால் சிங். உத்தரபிரதேச காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றியவர். 1990களில் ஆக்ராவில் பணிபுரிந்தபோது, ​​திடீரென தனது வேலையை விட்டுவிட்டார்.வேலை இல்லாமல் அலைந்து கொண்டிருந்த சூரஜ் பால் சிங், திடீரென தனது பெயரை நாராயண் சாகர் விஸ்வ ஹரி என்றும், அவரது மனைவி மாதாஸ்ரீ என்றும் மாற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

பெயராலும் புகழாலும் அதனால் கிடைக்கும் வருமானத்தாலும் படிப்படியாக பாபாவாக மாறிய சூரஜ், அந்த கிராமத்தில் உள்ள தனது 18 ஏக்கர் நிலத்தில் ஒரு பெரிய ஆசிரமத்தைக் கட்டினார்.ஆன்மிகச் சொற்பொழிவு மூலம் லட்சக்கணக்கான பக்தர்களை அவர் ஈர்க்கத் தொடங்கியதால், போலே பாபாவின் புகழ் மாவட்டம் முழுவதும் பரவியது. பின்னர், பல மாநிலங்களில் இருந்து போலே பாபாவின் ஆசிரமத்திற்கு பக்தர்கள் வரத் தொடங்கினர்.

ஹத்ராஸ்

இந்நிலையில், ஹத்ராஸில் பல ஆண்டுகளுக்குப் பிறகு பாபா ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்துவார் என்று அறிவிக்கப்பட்டது. ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள இட்டா நகர் அருகே உள்ள ரதிபன்பூர் கிராமத்தில் விவசாய வயலில் 80,000 பேர் கூடுவார்கள் என்று கூறி இந்த நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி கோரப்பட்டது. ஆனால் திரண்டது, சுமார் 3 லட்சம் பேர். போலே பாபா தனது சொற்பொழிவை முடித்து விட்டு வெளியேறியதும், ஆயிரக்கணக்கான மக்கள் அவரது வாகனம் சென்ற பாதையில்,  இருந்த மண்ணை  எடுக்க ஒரே நேரத்தில் குவிந்தனர்.

மறுபுறம், இடத்தை விட்டு வெளியேற முயன்றவர்களும் நெரிசலில் சிக்கினர்.இதில் நிலைதடுமாறி அருகில் உள்ள சேறும் சகதியுமான வாய்க்காலில் ஒருவர் பின் ஒருவராக விழ ஆரம்பித்தனர். எழுந்திருக்க முடியாமல், பக்தர்கள் நெரிசலில் சிக்கி, மிதித்ததில், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என, 120க்கும் மேற்பட்டோர் மூச்சு திணறி இறந்தனர்.  மேலும் சிறிய நகர பகுதியில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததும் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இவர் குறித்து காவல் அதிகாரிகள் கூறுகையில், போலே பாபா மீது பாலியல் வன்கொடுமை வழக்கும் உள்ளது. தற்போது அவர் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளது தெரியவந்துள்ளது. அதற்கான ஆவணங்களை கைப்பற்றியுள்ளோம். 13 ஏக்கரில் 5 நட்சத்திர ஓட்டல் போன்ற சொகுசு ஆசிரமம் கட்டியுள்ளார். ஆசிரமம் அமைந்துள்ள இடம் மட்டும் ரூ.4 கோடி.  மேலும், கணக்கில் வராத கோடிக்கணக்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆக்ரா, எடாவா, கஸ்கஞ்ச், பருச்சாபாத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய இடங்களில் போலே பாபா மீது வழக்குகள் உள்ளன எனஅ தெரிவித்தனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி

From around the web