பேருந்தில் பிறந்த பெண் குழந்தை.. வாழ்நாள் முழுவதும் பஸ் பாஸ் இலவசம்.. அரசு சூப்பர் அறிவிப்பு!

 
ஸ்வேதா ரத்னம்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள முஷிராபாத்தைச் சேர்ந்த ஸ்வேதா ரத்னம் என்ற கர்ப்பிணி பெண் பகதூர்புரா செல்லும் அரசு பேருந்தில் ஏறினார். பேருந்தில் பயணம் செய்த அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அதன்பின், டிரைவர் பஸ்சை சாலையோரம் நிறுத்தினார். பயணிகளை கீழே இறக்கிவிட்டு, பெண் கண்டக்டர் பி.சரோஜா, மற்ற பெண் பயணிகளுடன் சேர்ந்து பேருந்தில் வலி ஏற்பட்ட ஸ்வேதாவுக்கு பிரசவம் பார்த்த நிலையில், பெண் குழந்தை பிறந்தது.

பின்னர் இருவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர், நிர்வாக இயக்குனர் சஜ்ஜனார் ஆகியோர் பெண் கண்டக்டர் மற்றும் டிரைவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும், தெலுங்கானா அரசு பேருந்தில் குழந்தை பிறந்தால், அந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணத்திற்கான பஸ் பாஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web