பச்சிளம் பெண் குழந்தை சாக்கடையில் சடலமாக மீட்பு.. தீவிர விசாரணையில் போலீசார்!

 
 குழந்தை

மதுரையில் கழிவுநீர் கால்வாயில் கிடந்த புதிதாகப் பிறந்த பெண் குழந்தையின் சடலத்தை போலீஸார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை பெத்தானியாபுரம் குடியிருப்பு அருகே செபாஸ்டியன் நகர் தேவாலயம் உள்ளது. அதன் எதிரே உள்ள வாய்க்காலில் புதிதாகப் பிறந்த குழந்தையின் சடலம் கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

குழந்தை உயிரிழப்பு

இதையடுத்து கரிமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்த குழந்தையின் உடலை மீட்டு 108 ஆம்புலன்சில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாக்கடையில் பெண் குழந்தை கிடப்பதாகவும்  காலை 10 மணிக்கு மேல் அப்பகுதியில் வைக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள கர்ப்பிணிகள் விவரம், சமீபத்தில் பிரசவம் ஆன பெண்களின் விவரம் குறித்து கரிமேடு போலீஸார் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web