கால்வாயில் பெண் சிசு கிடந்த விவகாரம்.. கையும் களவுமாக சிக்கிய பெண்.. அதிர்ச்சி பின்னணி!

 
ரேவதி

மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் உள்ள ஃபாஸ்டின் நகர் சர்ச் அருகே கடந்த புதன்கிழமை காலை வாய்க்காலில் பெண் குழந்தை பிணமாக கிடப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கரிமேடு போலீசார் குழந்தையை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், குழந்தையை வீசிச் சென்றது யார் என அக்கம் பக்கத்தினரை போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரித்ததில், குழந்தையை வீசிச் சென்றது அதே பகுதியில் உள்ள அகத்தியர் தெருவில் வசிக்கும் ரேவதி என்பது தெரியவந்தது. அதன்பின், ரேவதியிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், திருமணமாகி கணவரை பிரிந்து தாய் மற்றும் 10 வயது மகனுடன் வசித்து வரும் ரேவதி, தெருவோரமாக பாட்டில்களை சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.

மேலும் பலருடன் திருமணத்திற்கு புறம்பாக தொடர்பு வைத்து இருப்பதும் தெரியவந்தது. கர்ப்பமாக இருந்த அவருக்கு கடந்த புதன்கிழமை காலை வீட்டில் பிரசவம் நடந்தது. இதையடுத்து, ரேவதியின் தாய் தனலெட்சுமி, ‘குழந்தை வேண்டாம்’ என்று கூறியதாக தெரிகிறது. இதனால் அவர் பிறந்த பெண் குழந்தையை சாக்கடையில் வீசியது தெரிய வந்துள்ளது. இதையடுத்து ரேவதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

ரேவதி உடல்நிலை சரியில்லாததால் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், குணமடைந்தவுடன் மதுரை மகளிர் மத்திய சிறையில் அடைக்கப்படுவார் என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, ரேவதிக்கு வீட்டில் எப்படி பிரசவம் நடந்தது, அவர் தானே பிரசவித்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web