நெகிழ்ச்சி... புத்தாடை அணிவித்து, வளையல் பூட்டி பசுமாட்டுக்கு வளைகாப்பு!

 
வளையல்

காக்கை குருவி எங்கள் ஜாதி எனப் பாடிய பாரதியார் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் அருமையான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்த வகையில் தென்காசி மாவட்டம் , கடையம் அருகே உள்ள பூவன்குறிச்சி  கிராமத்தில் வசித்து வரும் தம்பதி  கனகராஜ் - பால சரஸ்வதி. இதில் கனகராஜ் கடையம் யூனியன் முன்னாள் கவுன்சிலர்.  தற்போது முழு நேர விவசாயியாக மாறி  காளை, பசு மாடுகளை அவரது வீட்டில் வளர்த்து வருகிறார்.

பசுமாடு

இதில் அவர் வளர்த்து வரும் ஒரு பசுமாடு  கன்று குட்டியில் இருந்து இவரது வீட்டில் தான் வளர்ந்து வருகிறது. தற்போது தான் முதன் முதலாக  சினையாகி பிரசவத்திற்கு தயார் நிலையில் உள்ளது.  இந்த பசு மாட்டிற்கு அக்கம்பக்கத்தினரை அழைத்து விவசாய தம்பதி வளைகாப்பு நடத்தி அழகு பார்த்தனர்.  அதன்படி   கொம்பில் வளையல் அணிவித்து, பசுவிற்கு புத்தாடை  அணிவித்தும் வளைகாப்பிற்கு சொந்த பந்தங்களை அழைத்து விருந்து வைத்தும் அசத்தினர்.  

வரிசை

இந்தச் சம்பவம் சுற்றுவட்டாரத்தில் பெரும்  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விவசாயி கனகராஜ்  எனது நீண்ட நாள் ஆசை எங்கள் வீட்டில் கன்று முதல் வளர்த்து வந்த பசுவிற்கு வளைகாப்பு நடத்த வேண்டும் என  ஆசைப்பட்டோம். சிறிதும் குறையின்றை அதனை நடத்தி முடித்து விட்டோம் என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி .  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web