பச்சரிசி..ரோமேனியா.. காஜா லட்டு... மாம்பழ சாலையும் தாத்தாச்சாரியார் தோட்டமும்

 
மாம்பழம்

திருச்சிக்கும் மாம்பழத்திற்கும் பல்லாண்டுகளாக நீண்ட நெடிய பந்தம் இருந்து வருகிறது. திருச்சி, மாம்பழச்சாலையில் உள்ள 'தாத்தாச்சாரியார் தோட்ட ‘மாம்பழக்கடை'யைப் பற்றி தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. இங்கு விளையும் மாம்பழங்கள், குடியரசுத் தலைவர் முதல் தமிழக முதல்வர் மட்டுமல்லாது உயரதிகாரிகள் வரை.. பலருக்கும் செல்கின்றன என்றால் ஆச்சர்யம் தானே?

'முக்கனி'களில் இக்கனிக்கே முதல் இடம். மருத்துவக் குணம் நிறைந்தது. சப்புக்கொட்டி சாப்பிட வைப்பது என மொத்தத்தில் அனைவரையும் சுவையால் மயங்க வைக்கும் 'மந்திரப்பழம்' தான் இந்த மாம்பழம்.

மாங்காய் மாம்பழம்

மாம்பழச் சாலையில் நள்ளிரவு தோப்புக்கு செல்லும் வழியில் உள்ள சாலையில் இருந்து மாம்பழத் தட்டுகள் அடுக்கப்பட்டு ஏலம் விடப்படுகின்றன. இங்கிருந்து தான் சிறு வியாபாரிகளுக்கும் பெரும் வியாபாரிகளுக்கும் விற்பனை  செய்யப்படுகின்றன. தட்டுக் கணக்கில் கொள் முதல் செய்யப்பட்டு பின்னர் சைஸ் வாரியாக பிரித்து விற்பனை செய்கிறார்கள் சில்லறை வியாபாரிகள்.

திருச்சியில் விளையும் மாம்பழத்தைப் பற்றியும் காவிரி ஆற்றின் கரையில் மாந்தோப்பு வைத்திருக்கும் பாலு அவர்களிடம் பேசினோம். எங்கள் தோப்பில் விளையும் மாம்பழங்களில் மிகவும் சுவையானது இமாம்பசந்த்து தாங்க. பசந்துனு சொல்வாங்க. இது மட்டுமல்லாம நீலம், பங்கனப்பள்ளி, ரோமேனியா, கள்ளாமணி, காஜா லட்டுனு பல வகை இருக்குங்க. ஆனாலும் பசந்துக்கு தான் ஏக கிராக்கி. எல்லா பழங்களுமே இயற்கை எரு போட்டு வளக்குறோம். மருந்து அடிக்கறது இல்ல. நல்லா பெருத்த பின்னாடி பால் வடிய வச்சு தான் கொடுக்குறோம். இங்கே இருந்து வெளிநாட்டுக்கு வெளி மாநிலங்களுக்கு எல்லாம் பார்சல் அனுப்புறோம்னா பார்த்துக்கங்க. சீசன்ல மட்டும் தான் விளையுங்கறதால ஏக கிராக்கிங்க என்றார். 

திருச்சி பாலு

சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கத்திற்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது மாம்பழச்சாலை. அதுவும் காவிரிக் கரையில் உள்ள தோட்டங்களில் விளையும் மாம்பழத்திற்கு தனிச்சுவை தான் அந்த வகையில், இந்தத் தாத்தாச்சாரியார் தோட்டங்களில் விளையும் மாம்பழங்களுக்கு என தனிச்சுவை உள்ளதாகவும் சொல்கிறார்கள் மாம்பழப் பிரியர்கள். இந்தப் பழங்களுக்கு மட்டும் ஏன் இத்தனை கிராக்கி? மூணே முணு விஷயம் தான் சார். எல்லா மரமும் மூதாதையர்களால் தரமாக பயிர் செய்யப்பட்டது. இயற்கை முறையில் விளைவிக்கப்படுகிறது. முக்கியமாக காவேரிப் படுகையில் இருக்கு என்றவர், அப்புறம் இன்னொரு விஷயம் சார்... பச்சரிசின்னு ஒரு காய் இருக்கு. அது பழுக்கவே வேண்டாம். அப்படியே சாப்பிடலாம். ஆப்பிள் மாதிரி அருமையா இருக்குங்க எனக் கூறியவர் வருடத்தில் 20 நாட்கள் மட்டுமே பச்சரிசி கிடைக்கும்ங்க. அத ரெகுலர் கஸ்டமர்களுக்கே கொடுக்க சரியாக இருக்கும்ங்க என்றார்.

அவர் சொன்னது உண்மை தான். ஆப்பிள் தோற்றது. அப்படி ஒரு மென்மை, மணம், இனிப்பு. சபாஷ் பேஷ் பேஷ் என ருசித்து விட்டு வாழ்த்துக்கள் சொல்லி நடையைக்கட்டினோம்!

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web