’களைகட்டிய பேச்சுலர் பார்ட்டி’.. பயங்கர குஷியில் புது மணமகன் பிரேம்ஜி!

 
பிரேம்ஜி

நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி பல ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் தனிமையாகவே இருந்து வந்தார். இதனால், பிரேம்ஜியின் அண்ணன் வெங்கட் பிரபு, யுவன் ஷங்கர் ராஜா மற்றும் அவரது குடும்பத்தினரை பார்க்கும் போதெல்லாம் ரசிகர்கள் கேட்கும் முக்கியக் கேள்வி “பிரேம்ஜிக்கு எப்போது திருமணம்” என்பதுதான்.

இந்நிலையில் சேலத்தை சேர்ந்த இந்து என்ற பெண்ணை பிரேம்ஜி அமரன் திருமணம் செய்ய உள்ளார். ஆனால் பிரேம்ஜி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாததால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். நேற்று பிரேம்ஜியின் சகோதரர் வெங்கட் பிரபு தனது சகோதரரின் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். ஜூன் 9-ம் தேதி மிக நெருங்கிய வட்டாரத்தில் திருமணம் நடைபெறவுள்ளதால் அவர்களது தனியுரிமையை மதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மேலும், மணமகள் ஊடகங்களைச் சேர்ந்தவர் அல்ல என்றும், மணமக்களை ஆசிர்வதிக்குமாறும் அந்த அறிவிப்பில் வெங்கட் பிரபு கேட்டுக் கொண்டார்.

அடி தூள்! பிரேம்ஜி அமரனுக்கு விரைவில் திருமணம்

இந்நிலையில் நடிகர் பிரேம்ஜியின்   பேச்சுலர் பார்ட்டியின் புகைப்பபடம் ஒன்று வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நடிகர் பிரேம்ஜிக்கு ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ள நிலையில், இன்று பிரேம்ஜி தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தனது  பேச்சுலர் பார்ட்டியை கொண்டாடினார். பார்ட்டியில் வெங்கட் பிரபு, வைபவ், ஜெய், எஸ்பிபி சரண், மகேந்திரன், சுனில் ரெட்டி, அரவிந்த் ஆகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பேச்சுலர் பார்ட்டிக்கு வந்த அனைவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web