பகீர்... 17 வயது மாணவியை காவல் நிலையத்தில் நிர்வாணமாக்கி... காவல் ஆய்வாளர் அதிர்ச்சி செயல்!

 
போலீஸ் க்ரைம்

அசாம்  மாநிலத்தில், காவல் நிலையத்திற்குள் 17 வயது பள்ளி மாணவியை நிர்வாணப்படுத்தி பாலியல் வன்கொடுமைச் செய்த காவல் நிலைய ஆய்வாளர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக, மாணவியிடம் மிக கொடூரமாக காவல்நிலைய ஆய்வாளர் நடந்து கொண்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் கோக்ராபரைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஒருவர், தனது காதலுக்கு பெற்றோர் சம்மதிக்காததால், காதலனுடன் திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு தப்பித்து சென்றுள்ளார். இந்நிலையில், சுற்றி திரிந்து கொண்டிருந்த காதலர்கள் இருவரையும் சந்தேகத்தின் பேரில் கோக்ராபர் காவல் நிலைய போலீசார் பிடித்து விசாரித்தனர். பின்னர், காதலர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அன்று இரவு முழுவதும் இருவரையும் லாக் அப் அறையில் அடைத்து வைத்தனர். 

rape

பின்னர், அதே காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரியும் பினன் ராய், 17 வயது மாணவியை மிரட்டி, ஆடைகளை களைந்து  நிர்வாணப்படுத்தி உள்ளார். பின்னர் பிற போலீசார் முன்னிலையில், மாணவியை நிர்வாணமாக்கி செல்போனில் விதவிதமாக நிற்க சொல்லி புகைப்படங்களை எடுத்துள்ளார். அதன் பின்னர் மாணவிக்கு பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார். 

தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை பற்றியும்,  நிர்வாணப்படுத்தி அதைப் புகைப்படங்களாக எடுத்ததையும் பாதிப்புக்குள்ளான மாணவி புகார் கடிதமாக எழுதி காவல்துறை உயர் அலுவலர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதைத் தொடர்ந்து டிஐஜி பிரஜென்ஜித் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். இது தொடர்பாக அறிக்கையை அசாம் டிஜிபி ஜிபி சிங்கிடம் சமர்பித்தார்.

பாலியல் செக்ஸ் பலாத்காரம் கற்பழிப்பு பெண்

பள்ளி மாணவியின் புகாரின் அடிப்படையில் பீமான் ராயை சஸ்பெண்ட் செய்து அசாம் டிஜிபி ஜிபி சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார். பீமான் ராய் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக இருக்கும் பீமான் ராயை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web