அதிர்ச்சி... நெஞ்சில் கத்தியுடன் காவல் நிலையத்திற்குள் நுழைந்த மாணவன்!
நெஞ்சில் கத்தி குத்தப்பட்ட நிலையில், மாணவன் ஒருவன் காவல் நிலையத்தில் நுழைந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் பள்ளிக்கூட வாசலில் மாணவர்கள் தாக்குதல் நடத்திக் கொண்டதும், இந்த தாக்குதலில் கத்தியால் ஒரு மாணவனை 3 பேர் சுற்றி வளைத்து குத்தியதும் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கத்தியால் குத்தப்பட்ட சிறுவன், நெஞ்சில் குத்திய கத்தியுடன் அங்கிருந்து அப்படியே காவல் நிலையத்திற்கு சென்ற சம்பவம் பரபரப்பானது.
டெல்லியில் பஹர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவர், நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது, பள்ளிக்கூடத்தின் வாசல் அருகே 3 பேர் அந்த சிறுவனை சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர். தாக்குதலுக்குப் பின் கத்தியை எடுத்து சிறுவனை குத்திவிட்டு அங்கிருந்து 3 பேரும் தப்பியோடினர்.

கத்தியால் குத்தப்பட்ட சிறுவன், நெஞ்சில் குத்திய கத்தியுடன் அப்படியே அருகில் உள்ள பஹர்கஞ்ச் காவல் நிலையத்திற்கு சென்றான். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அச்சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிறுவர்களிடையே தகராறு ஏற்பட்டதாகவும், அதற்கு பழிவாங்கும் வகையில் தற்போது இந்த கத்திக்குத்து தாக்குதல் நடந்திருப்பதும் தெரிய வந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாக்குதல் நடத்திய 3 மைனர் சிறுவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
