பகீர்.... சென்னையில் மாயமான சொகுசு கார் பாகிஸ்தானில் மீட்பு... பரபரப்பு வாக்குமூலம்!
சென்னையில் அண்ணாநகரில் வசித்து வருபவர் எத்திராஜ் ரத்தினம். இவரது டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் ஜூன் 10ம் தேதி திருடு போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

அதன்படி காணாமல் போன ஃபார்ச்சூனர் சொகுசு காரை, ராஜஸ்தானில் பாகிஸ்தான் எல்லையில் இருந்து போலீசார் மீட்டுக் கொண்டு வந்துள்ளனர். ஜூலை 19ம் தேதி, நாடு முழுவதும் சொகுசு கார்களை மட்டுமே குறிவைத்து திருடி வந்த சத்தியந்திரசிங் என்பவனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அவர் கொடுத்த தகவலின்பேரில், ராஜஸ்தான் மாநிலத்தில், பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய, பார்மர் பகுதியில் இருந்து, ஃபார்ச்சூனர் காரை, போலீசார் சில நாட்களுக்கு முன் மீட்டுக் கொண்டு வந்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
