பகீர்... செல்பி எடுத்து சிக்கிய இன்ஸ்டா பிரபலம்... 8.7 லட்சம் அபராதம்...!
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பிரசித்தி பெற்ற ‘Invisible House’ அமைந்துள்ளது. இந்த கண்ணுக்கு தெரியாத பீச் வீடு, ஒரு இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளுயன்சருக்கு சிக்கலாக மாறிவிட்டது. இந்த வீட்டில் சேன் டேவிஸ் என்ற சமூக வலைதள பிரபலம், இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள தினசரி வாடகை வீட்டில் தங்கிய போது, ஒரு செல்ஃபி எடுத்ததற்காக ரூ.8.7 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார்.
இந்த வீடு, பாலைவனத்தில் வெளிப்படையான கண்ணாடி சுவர்களால் சூழப்பட்டு ஒட்டுமொத்தமாக மாறியுள்ளது. இங்கு முன் அனுமதியின்றி எடுக்கப்படும் புகைப்படங்கள், குறிப்பாக வணிக நோக்கத்திற்காக பதிவிடப்படும் பதிவுகள், கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட்டவை.
இச்சம்பவம் குறித்து டேவிஸ் “எங்களுடைய நண்பரின் காதலி குளியலறையில் எடுத்த ஒரு செல்ஃபியை இன்ஸ்டாகிராமில் போட்டார். ஆனால் அதையும் பிரச்சினையாக எண்ணி அபராதம் வசூலிக்க முயன்றனர்,” எனக் கூறினார்.

இந்த வீட்டுக்குள் சென்றவர்களால் வெளியே பார்வையிட முடியாது ஆனால் வெளியிலிருந்து உள்ளே தாராளமாக பார்க்க முடியும். அந்த வகையில் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் தனியுரிமை இல்லாமல் இருப்பது போன்ற அனுபவம் ஏற்பட்டதாக டேவிஸ் புகார் தெரிவித்துள்ளார்.
“இந்த வீடு வெளியிலிருந்து நிதானமாகவும், விலை உயர்ந்த விடுதி போல தோன்றுகிறது. அதே நேரத்தில் உள்ளே தூங்கவே முடியாத அளவுக்கு இருந்தது” என பதிவிட்டுள்ளார். வீடு நிர்வாகம், “சொந்த பயன்பாட்டுக்கே” என்ற பெயரில் பதிவிடப்பட்ட புகைப்படங்களும் வணிகத்திற்கு என்றே கருதப்படும் என்ற விதிமுறையை முன்வைத்து, அந்த செல்ஃபியை ஒரு “பிரமோஷனல்” பதிவாக பார்த்ததால் இந்த அபராதம் விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
