ஆப்பிள் ஐபோன்களுக்கு தடை... எலான் மஸ்க் திடீர் அறிவிப்பு!

 
எலான்மஸ்க்

 உலகின் மாபெரும் பணக்காரர்களில் ஒருவர்  எலான் மஸ்க். இவர்  தற்போது விண்வெளி ஆராய்ச்சியில் தனது ஆர்வத்தை செலுத்தி வருகிறார்.  இணைய சேவையை வழங்கும் செயற்கைக்கோள்களை செலுத்துவது,  ஒரு ராக்கெட்டை எப்படி மீண்டும் பயன்படுத்துவது என்பது குறித்த  ஆராய்ச்சியில் தொடர்ந்து தனது கவனத்தை செலுத்தி  வருகிறார்.


டெஸ்லா நிறுவனத்தின் அதிபரான எலான்  எலக்ட்ரிக் கார் தயாரிப்பிலும் தீவிரம் காட்டி வருகிறார்.  தனது நிறுவனத்துடன் போட்டியிடும் மற்ற நிறுவனங்களை வம்பு இழுப்பதிலும் கில்லாடி தான் எலான் மஸ்க். இவர் எப்போதும் தம்மை சமூக வலைதளங்களில்  ஆக்டிவாக வைத்து கொள்கிறார்.   உலக அளவில் மிகப் பிரபலமாக இருக்கும் ஆப்பிள் நிறுவனம், தங்களது மேக்புக், ஐபோன், ஐபாட்  சாதனங்களில் ஓபன் ஏஐ டூல்களை இனி பயன்படுத்தலாம் என ஆப்பிள் சிஇஓ டிம் குக்  ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

எலான் மஸ்க்

இதனை கண்டித்து ரீட்வீட் செய்த எலான் மஸ்க்  ஆப்பிள் சாதனங்களில் ஓபன் ஏஐ டூல் பயன்பாட்டுக்கு வந்தால் அந்த சாதனங்களை தனது நிறுவனங்களில் பயன்படுத்த தடைவிதிக்கப்படும் என  பதிவிட்டிருந்தார். அத்துடன் தமது  X பக்கத்தில் தமிழ் மீம்  ஒன்றையும் பதிவிட்டிருந்தார்.  தப்பாட்டம் படத்தில் நாயகனும் நாயகியும் இளநீரில் ஸ்ட்ரா போட்டு குடிக்கும் போஸ்டரை பதிவிட்டு  ஆப்பிள் மற்றும் ஓபன் ஏஐ நிறுவனத்தை கலாய்த்து இருக்கிறார் எலான் மஸ்க். 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web