குற்றால அருவியில் குளிக்க தடை... சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றம்!
தென்காசி மாவட்டத்தில் குற்றால அருவிகளில் நேற்று மாலை சிறிது நேரம் மிதமான மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழை காரணமாக இன்று காலை குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அருவிக்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சபரிமலை சென்று வரும் பக்தர்கள் குற்றாலம் வந்து செல்வதுண்டு. குளிக்க விதிக்கப்பட்ட தடையால் ஏமாற்றம் அடைந்தனர் எனினும் பழைய குற்றால அருவி, புலி அருவி, ஐந்தருவி இவைகளில் குளிக்க தடை இல்லை என்பதால் அங்கு சென்று பலர் நீராடிவிட்டனர்.
டிசம்பர் 12 ம் தேதி குற்றாலத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளப்பெருக்கு காரணமாக அருவிக்கரைகள் சேதமடைந்த நிலையில் ஓரளவே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் மீண்டும் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பதாக தெரிகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!