பள்ளிகளில் குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம்கள் விற்கத் தடை ... தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு!.

 
குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம்

 உணவுப்பொருட்களில் கலப்படம் காரணமாக சமீபகாலமாக உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இதிலிருந்து பள்ளி மாணவி, மாணவிகளை காக்க உலக சுகாதார மையம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளிகளில் சர்க்கரை கலந்த குளிர்பானங்கள் விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது எனக் கூறியுள்ளது.

குளிர்பானங்கள்

 பள்ளிகளில் சர்க்கரை கலந்த பானங்கள், பீச் இனிப்புகள் மற்றும் ஐஸ்கிரீம்கள் குழந்தைகளுக்கு உடல் பருமன் மற்றும் பல்வேறு உடல் நலம் சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.  பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருதி இதனை தடுக்கும் வகையில்  பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளி வளாகங்களில் குளிர்பானங்களுக்கு பதிலாக நல்ல தண்ணீர், மோர், புதினா மற்றும் எலுமிச்சைச்சாறு இவைகளை விற்பனை செய்யலாம் என  உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!