சிவப்பு நிற லிப்ஸ்டிக் பயன்படுத்த தடை.. பெண்களுக்கு வடகொரிய அதிபர் பகீர் உத்தரவு!

 
 கிம் ஜாங் உன்

வடகொரியாவின் ரகசியங்கள் பொதுவெளியில் எளிதில் வெளிவருவதில்லை. இதுதவிர அங்கு கட்டுப்பாடுகளும் தண்டனைகளும் கடுமையாக இருப்பதாக கூறப்படுகிறது. பல விசித்திரமான கட்டுப்பாடுகளை கொண்ட வடகொரியாவில் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடகொரிய பெண்கள் சிவப்பு நிற உதட்டுச்சாயம் (லிப்ஸ்டிக்) பூச தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு நிறம் வரலாற்று ரீதியாக கம்யூனிசத்தை பிரதிநிதித்துவப்படுத்தினாலும், நாட்டின் ஜனாதிபதி கிம் ஜாங் உன், அது முதலாளித்துவத்தின் சின்னமாக உணர்கிறார். அதனால் தான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சிறப்பு நிறத்தில் உதட்டுச்சாயம் பூசும் பெண்கள் மிகவும் கவர்ச்சிகரமானவர்கள் என்றும் அது எளிமை மற்றும் அடக்கத்தை மீறுவதாகவும் கூறப்படுகிறது. அதனால்தான் அதிபர் கிம் ஜாங் உன் இப்படியொரு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கிம் ஜங் உன்

இதுதவிர, அந்த நாடு நீலம் மற்றும் தோல் நிற ஜீன்ஸ் மற்றும் சில சிகை அலங்காரங்களுக்கு தடை விதித்துள்ளது. அதேவேளை, அவ்வாறு தடையை மீறுவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என அந்நாடு அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web