பெங்களூரு போதைப்பார்ட்டியில் பிரபல நடிகை உட்பட 86 பேர் கைதாக வாய்ப்பு? ... அதிர்ச்சி வீடியோ!
பெங்களூருவில் பண்ணை வீட்டில் பார்ட்டி நடைபெறுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதில் ஏராளமான சினிமா பிரபலங்கள் ஈடுபட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பார்ட்டியில் இருந்த அனைவருமே போதை பொருட்கள் பயன்படுத்தினார்களா? என பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது தெலுங்கு நடிகை ஹேமா உட்பட 86 பேர் போதை பொருள் உட்கொண்டது தெரிய வந்தது.
இந்த பார்ட்டியில் 73 ஆண்கள் 30 பெண்கள் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அனைவரிடமும் நடத்தப்பட்ட ரத்த பரிசோதனையில் 59 ஆண்களும் 27 பெண்களுக்கும் பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. இதனையடுத்து இவர்கள் அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகும் படி உத்தரவிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிறந்த நாள் விழா பார்ட்டி என்ற போர்வையில் அதிகாலை 2 மணி வரை இந்தப் பார்ட்டி நடைபெற்றதால் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளதாகத் தெரிகிறது.

பாசிட்டிவ் ரிசல்ட் வந்தவர்களுக்கு மத்திய கிரைம் பிராஞ்ச் நோட்டீஸ் அனுப்ப உள்ளது. பார்ட்டி நடந்த இடத்தில் இருந்து 14.40 கிராம் எம்.டி.எம்.ஏ. மாத்திரிகைள், 1.16 கிராம் எம்டிஎம்ஏ கிரிஸ்டல்ஸ், 6 கி ஹைட்ரோ கஞ்சா, 5 கி கோகைன், கோகைன் பூசப்பட்ட 500 நோட்டுகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். பிறந்தநாள் விழா பார்ட்டி என்ற போர்வையில் அதிகாலை 2 மணியையும் தாண்டி நடைபெற்றதால் போலீசார் அதிரடி சோதனையில் இறங்கினர். இதில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் தெலுங்கு நடிகை ஆஷி ராயும் ஒருவர். ஆனால் இதுகுறித்து ஆஷிராய் இந்த பார்ட்டியின் உண்மையான நோக்கத்தை தான் அறிந்திருக்கவில்லை. பார்ட்டியில் கலந்து கொண்டது உண்மை தான். ஆனால் உள்ளே என்ன நடந்தது என்பது தெரியாது எனத் தெரிவித்துள்ளார். பார்ட்டி நடந்த பண்ணை வீடு கோபால ரெட்டி என்பவருக்கு சொந்தமானது . இந்த பார்ட்டியை ஐதராபாத்தைச் சேர்ந்த வாசு என்பவர் ஏற்பாடு செய்ததாகவும் தெரிகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
