பத்மஸ்ரீ பங்காரு அடிகளார் காலமானார்.. பக்தர்கள் அதிர்ச்சி!!
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார். இவர் திடீரென மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 82. செங்கல்பட்டு மாவட்டம் மேல் மருத்துவத்தூரில் இவர் தொடங்கிய அறக்கட்டளை பல கல்வி நிறுவனங்களை தொடங்கி தொடர்ந்து நடத்தி வருகிறது.
ஆதிபராசக்தி கோயிலில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் . தீட்டே கிடையாது என கடவுள் வழிபாட்டில் பெரும் புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார் . தசரா கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில் அவர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ள நிலையில் அவரது பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒரு வருடமாகவே உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்தார். இந்தத் தகவலால் பாதுகாப்பு காரணமாக அங்கு 300க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். பங்காரு அடிகளாரின் ஆன்மீகச் சேவையைப் பாராட்டி கடந்த 2019ல் இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவித்தது. உலகம் முழுவதும் பங்காரு அடிகளாருக்கு தீவிர பக்தர்கள் உள்ளனர்.
ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த ஆன்மிக உலகில் பெண்களையும் பங்கெடுக்க வைத்தவர் பங்காரு அடிகளார். இவரை பக்தர்கள், பெண்கள் அம்மா என அழைக்கின்றனர். பெண்களை மையப்படுத்தி கட்டமைக்கப்பட்ட ஆதிபராசக்தி பீடம் . இங்கு நிதி வசூலிப்பதிலிருந்து அந்த நிதியை நிர்வாகம் செய்வது வரை அனைவரும் பெண்களே. குறிப்பாக கோயில் கருவறைகளில் பெண்களும் பூஜை செய்யலாம் எனும் வழக்கத்தை தமிழகத்தில் பரவலாக்கியது மேல்மருத்துவர் சித்தர் பீடம்தான்.
அதே நேரத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடி மிகப் பெரிய சமயப் புரட்சியை நடத்தி காட்டினார். மிக உயர்சாதி மத குருக்கள் மட்டுமே தமிழகத்தில் பெரிய மத நிறுவனங்களை உருவாக்க முடியும் என்ற விதியை உடைத்தவர் பங்காரு அடிகளார். 30 ஆண்டுகளுக்கு முன்னால் கல்வியிலும் பொருளாதாரத்திலும் மேல்மருவத்தூர் மிகவும் பின்தங்கிய பகுதி. ஆனால், இன்று மேல்மருவத்தூரை கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பங்காருவின் சித்தர் பீடம் நிறைய முன்னேற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!