சந்தன பேழையில் , அமர்ந்த நிலையில், அரசு மரியாதையுடன் பங்காரு அடிகளார் உடல் நல்லடக்கம்!!
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் நேற்று மாலை மாரடைப்பால்காலமானார். பெண்கள் மாதவிலக்கு நாட்களிலும் கருவறைக்குள் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என சமூகபுரட்சிக்கு வித்திட்டவர். இவரை பக்தர்கள் அம்மா என அன்பாக அழைப்பது வழக்கம். ஆண்கள் விரதமிருந்து சபரிமலை செல்வது போல் பெண்கள் விரதமிருந்து செவ்வாடை அணிந்து இருமுடி கட்டி மேல்மருவத்தூர் கூட்டம் கூட்டமாக வந்து செல்வர்.
தங்களின் ஒரே நம்பிக்கையாக உயிராக இருந்த அம்மா பங்காரு அடிகளாரின் மறைவு பக்தர்கள் பலரது தலையில் இடியென இறங்கியுள்ளது. அம்மாவின் முகத்தை ஒரே ஒருமுறை இறுதியாக பார்த்து விடலாம் என செவ்வாடை அணிந்து பல மைல் தூரம் பயணித்து அலைகடலென மேல்மருவத்தூரில் குவிந்து விட்டனர் பக்தர்கள்.பங்காரு அடிகளார் உடல் பக்தர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மருவத்தூரில் திரும்பும் திசையெல்லாம் அம்மா அம்மா என்று கேட்கும் அழுகுரல்.. இனி நான் என்ன செய்யப்போகிறேன் என கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஆதிபராசக்தியின் பாதங்களில் ஜோதியாக கலந்து விட்ட பங்காரு அடிகளார் உடல் இன்று மாலையில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது உடல் சந்தன பேழையில் வைத்து தியான நிலையில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக ஆதிபராசக்தி சித்தர் பீட வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.மனிதர்களின் உடல் அடக்க செய்யப்படும் போது படுக்கை வசத்தில்தான் அடக்கம் செய்வார்கள். ஆனால் தியான நிலையில் சித்தி அடைபவர்கள் உடல் அமர்ந்த நிலையில் நல்லடக்கம் செய்யப்படும். அந்த வகையில் பங்காரு அடிகளாரின் உடல் அமர்ந்த நிலையில் அடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!