வங்கதேச தேசியக் கொடி அவமதித்த விவகாரம்.. இந்து துறவிக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு!

 
சின்மோய் கிருஷ்ணதாஸ் பிரம்மச்சாரி

பங்களாதேஷில் சிறுபான்மையினரைப் பாதுகாக்கக் கோரி கடந்த மாதம் ரங்பூரில் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தினர். அப்போது, ​​வங்கதேச தேசியக் கொடியை அவமதித்ததாக ‘இஸ்கான்’ எனப்படும் கிருஷ்ண பக்தி அமைப்பின் முன்னாள் தலைவர் சின்மோய் கிருஷ்ணதாஸ் பிரம்மச்சாரி, ‘சம்மிலிதா சனாதானி ஜாக்ரன் ஜோடே’ அமைப்பின் செய்தி தொடர்பாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் சின்மோய் கிருஷ்ணதாஸ் பிரம்மச்சாரி மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரது ஜாமீன் மனு, டிச., 12ல், சட்டோகிராம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது, ​​மனுவை விசாரித்த நீதிபதி சைபுல் இஸ்லாம், ஜாமின் வழங்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்தார். ஜாமீன் மனு மீதான விசாரணை ஜனவரி 2ஆம் தேதி நடைபெறும் என்று சட்டோகிராம் பெருநகர அமர்வு நீதிபதி சைபுல் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இஸ்கான் முன்னாள் துறவி சின்மோய் கிருஷ்ண தாஸின் ஜாமீன் மனுவை 30 நிமிட விசாரணைக்குப் பிறகு சட்டோகிராம் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அவர் சார்பில் 11 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் குழு ஆஜராகி வாதாடினர். சாட்டோகிராம் பெருநகர அமர்வு நீதிபதி எம்.டி.சைபுல் இஸ்லாம், சுமார் 30 நிமிடங்கள் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து, ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதாக தீர்ப்பளித்தார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web