வங்கதேச எம்பி தோலை உரித்து துண்டு துண்டாக வெட்டி கொலை... வெளியான பரபரப்பு தகவல்!
வங்கதேச எம்பி மருத்துவ சிகிச்சைக்காக கொல்கத்தாவிற்கு வந்திருந்தார். அவர் மர்மமாக கொலை செய்யப்பட்டார்.இத்தகவல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வங்கதேச நாட்டை சேர்ந்த எம்பி அன்வருல் அசிம் கொலை வழக்கில் தற்போது புதிய பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. ஹனி ட்ராப் மூலமாக இளம்பெண் ஒருவர் அவரை கொல்கத்தாவிற்கு வரவழைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் பிறகு கொலைகாரர்கள் அவருடைய உடலை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் கட்டி பல இடங்களில் சென்று வீசிச் சென்றதாக தெரிகிறது.

இந்த கொலைக்கு மூலமாக அசிமின் நண்பரும் வணிக கூட்டாளருமான முகமது அக்தருஸ்ஸாமான் செயல்பட்டதாக சிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேற்குவங்க மற்றும் டாக்காவில் போலீஸ் நடத்திய கூட்டு விசாரணையின் படி அடுத்தடுத்து 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் பெண் ஒருவரும் இறைச்சி கடைக்காரரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வந்த அசிம் மே 13 ம் தேதி அவருடைய குடியிருப்பில் இருந்து காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
