சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச இளைஞர்கள்.. 31 பேரை அதிரடியாக கைது செய்த போலீசார்!

 
 வங்கதேச இளைஞர்கள்

திருப்பூரில் பயங்கரவாத தடுப்பு போலீசார் நடத்திய சோதனையில் 31 வங்கதேச நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து போலி ஆதார் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன் நிறுவனங்களில் ஏராளமான வங்கதேச இளைஞர்கள் முறையான ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருப்பதாக கோவை பயங்கரவாத தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், பல்லடம் அருகே உள்ள அருள்புரம், செந்தூரான் காலனி பகுதியில் இயங்கும் தனியார் பனியன் நிறுவனத்தில் எஸ்பி பத்ரி நாராயணன் மற்றும் ஏடிஎஸ்பி ஆனந்தகுமார் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினர்.

கைது

அப்போது, ​​போலி ஆதார் அட்டைகளுடன் பணிபுரிந்த 28 வங்கதேச இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரண்டு வங்கதேச இளைஞர்களும், நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு வங்கதேச இளைஞர் என மொத்தம் 31 பேர் கைது செய்யப்பட்டு அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!