ஜனவரியில் 15 நாட்கள் விடுமுறை... வங்கிப் பணிகள இப்பவே திட்டமிடுங்க!
விடுமுறை நாட்களின் இந்த விரிவான பட்டியலைப் பயன்படுத்தி, வங்கிச் செயல்பாடுகள் தடையின்றி சீராக நடைபெறுவதை உறுதிசெய்து கொள்ளலாம்.
ஜனவரி மாதத்தில் பொதுவாக நிறைய அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் தான். ஜனவரியில் மொத்தம் 15 விடுமுறைகள் இருப்பதால், வங்கி வருகைகளைத் திட்டமிடுபவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல். ஜனவரி முதல் நாள், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை.
ஜனவரி 2025 வங்கி விடுமுறை நாட்கள் பட்டியல்
ஜனவரி 1: புத்தாண்டு
ஜனவரி 2: மன்னம் ஜெயந்தி மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் - மிசோரம் மற்றும் கேரளாவில் வங்கிகள் விடுமுறை
ஜனவரி 5: ஞாயிறு
ஜனவரி 6: குரு கோவிந்த் சிங் ஜெயந்தி - ஹரியானா மற்றும் பஞ்சாபில் வங்கிகள் விடுமுறை
ஜனவரி 11: இரண்டாவது சனிக்கிழமை
ஜனவரி 12: ஞாயிறு
ஜனவரி 14: மகர சங்கராந்தி மற்றும் பொங்கல் - ஆந்திரா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாட்டில் வங்கிகள் விடுமுறை
ஜனவரி 16: உழவர் திருநாள் - தமிழகத்தில் வங்கிகளுக்கு விடுமுறை.
ஜனவரி 19: ஞாயிறு .
ஜனவரி 22: ஐமோயின் திருவிழா - மணிப்பூரில் வங்கிகள் விடுமுறை
ஜனவரி 23: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஜெயந்தி - மணிப்பூர், ஒடிசா, பஞ்சாப், சிக்கிம், மேற்கு வங்காளம், ஜம்மு & காஷ்மீர் மற்றும் டெல்லியில் வங்கிகள் விடுமுறை
ஜனவரி 25: 4 வது சனிக்கிழமை
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!