ஜூலை மாத வங்கி விடுமுறை நாட்கள்.. தமிழ்நாட்ல மட்டுமே இந்த 7 நாட்களும் வங்கி விடுமுறை!

 
வங்கி விடுமுறை
நாளை ஜூலை மாதம் துவங்க உள்ள நிலையில், ஜூலை மாதத்தில் நாடு முழுவதும் எந்தெந்த நாட்களில் வங்கி விடுமுறை தினங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் மட்டுமே 7 நாட்கள் ஜூலை மாதத்தில் வங்கி விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. உங்க பண பரிவர்த்தனைகளை இப்போதே திட்டமிட்டுக்கோங்க. எந்தெந்த நாட்கள் என பார்க்கலாம் வாங்க. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றன. டிஜிட்டல் இந்தியாவாக மாறி வரும் நேரத்தில் பணப்பரிவர்த்தனைகளுக்கு மக்கள் பெரும்பாலும் வங்கிகளையே நம்பியுள்ளனர். அந்த வகையில் வங்கிகளின் விடுமுறை நாட்களின் அடிப்படையில் வங்கிப்பணிகளை திட்டமிட்டு கொள்ளும் வகையில் ரிசர்வ் வங்கி முதலிலேயே அடுத்து வரும் மாதத்துக்கான வங்கி விடுமுறை பட்டியலை வெளியிடுகிறது. அதன்படி புதிய மாதம் தொடங்கும் போது, ​​அந்த மாதத்தில் வரும் விடுமுறைக்காக ஊழியர்கள் அதிகம் காத்திருக்கிறார்கள்.  

டிசம்பரில் 16 நாட்கள் விடுமுறை!! வங்கி வேலைகளை ப்ளான் பண்ணிக்கோங்க!!

ஜூலை மாத வங்கி விடுமுறை பட்டியல் 

ஜூலை 3 -  புதன்கிழமை -ஷில்லாங்கில்  வங்கி விடுமுறை 
ஜூலை 6 - சனிக்கிழமை  MHIP தினத்தையொட்டி  ஐஸ்வாலில் வங்கிகள் விடுமுறை. 
ஜூலை 7 :  ஞாயிற்றுக்கிழமை 
ஜூலை 8 : திங்கட்கிழமை காங் ரதஜாத்ரா  இம்பாலில் வங்கிகள் விடுமுறை 
ஜூலை 9 : செவ்வாய்கிழமை காங்டாக்  வங்கிகள் விடுமுறை 
ஜூலை 13 : 2 வது சனிக்கிழமை  
ஜூலை 14 : ஞாயிற்றுக்கிழமை  
ஜூலை 16 : செவ்வாய்கிழமைஹரேலா  டேராடூன் வங்கிகள் விடுமுறை  

வங்கி
ஜூலை 17 : புதன்கிழமை முஹர்ரம் பண்டிகை   
ஜூலை 21 : ஞாயிற்றுக்கிழமை  
ஜூலை 27 : 4வது சனிக்கிழமை  
ஜூலை 28 :ஞாயிற்றுக்கிழமை  

வங்கிகளுக்கான விடுமுறைப் பட்டியல் எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக இருக்காது.  இந்த விடுமுறை நாட்களின் முழுமையான பட்டியல் ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, இதில் மாநிலங்களுக்கு ஏற்ப வெவ்வேறு பண்டிகைகள் மற்றும் விடுமுறை நாட்கள் குறித்த அனைத்து தகவல்களும் இடம்பெற்றுள்ளன.  

வங்கிகள் மூடப்பட்டிருந்தாலும், வாடிக்கையாளர்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படாது. விடுமுறை நாட்களில் கூட, ஆன்லைன் வங்கியின் உதவியுடன் மக்கள் தங்கள் எல்லா வேலைகளையும் முடிக்க முடியும் ஏனென்றால் வங்கியின் பெரும்பாலான சேவைகள் ஆன்லைனில் கிடைக்கின்றன. அதனால், விடுமுறை நாட்களிலும், வீட்டில் இருந்தபடியே வங்கிப் பணிகளைச் செய்து முடிக்கலாம்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web