குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்கத் தடை... சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக பல பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தென்காசி மாவட்டம் குற்றாலம் தென்காசி செங்கோட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்தது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனையடுத்து பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அனைத்து மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலி அருவிகளிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் இன்று அனைத்து அருவிகளிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகள் உட்பட வர்த்தகர்களும் விடுதி உரிமையாளர்களும் கவலை அடைந்துள்ளனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
