உஷாரா இருங்க!! இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!! நாளை புயல்!!

 
காற்றழுத்த தாழ்வு பகுதி

தமிழகத்தின் வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இந்த வளிமண்டல கீழடுக்கு இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான  பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அக்னி நட்சத்திர காலத்திலும் வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்து மக்கள் உற்சாகத்துடன் கோடை விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். இது குறித்து வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

புயல்

இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையை பொறுத்தவரை நகரின் ஒரு சில இடங்களிலும், புறநகர் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். அதே நேரத்தில் தமிழகத்தில்  விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மழை

இது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடலில் 'மோக்கர் புயலாக வலுவடையும் ஒடிசா மேற்கு வங்கம் நோக்கி புயல் நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. வடக்கு நோக்கி 'மோக்கா' புயல் தமிழக வளிமண்டலத்தில் நிலவும் ஈரப்பதம் ஈர்க்கப்பட வாய்ப்பு இதனால், தமிழகத்தின் வளி மண்டலத்தில் வறண்ட வானிலை உருவாகக்கூடும். இதன்காரணமாக தமிழகத்தில் 8ம் தேதிக்கு பிறகு இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு மழையும் படிப்படியாக குறையும்.வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு பல நாடுகள் பெயர் வைக்கின்றன

அந்த வகையில் 2023ம் ஆண்டில் வங்கக்கடலில் உருவாக இருக்கும் புயலுக்கு பெயரிட்ட நாடு ஏமன்.  அந்நாடு சூட்டிய பெயர்  தான்”மோக்கா” . இதற்கு காஃபிக்கொட்டை என்றும் அர்த்தம் உண்டு.இன்று முதல் அடுத்த 4நாட்கள் இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் வெப்ப அலைக்கு வாய்ப்பு இல்லை. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இதனால் அடுத்த 4 நாட்களாக பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும்   அதிகபட்ச வெப்பநிலை 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும்.ன்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  இதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web