உஷார்!! வங்கக்கடலில் உருவாகிறது “மோக்கா” புயல்!!

 
புயல்

தமிழகத்தில் நேற்று மே4ம் தேதி வியாழக்கிழமை முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ளது.  பல மாவட்டங்களில் இந்த வாரத் தொடக்கம் முதலே மழை பெய்துவருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளதாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.   தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை மே 6ம் தேதி முதல்  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதனால் மே 7ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி மே 8ம் தேதி புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல்

இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.  தமிழகத்தில் கடந்த  இரண்டு, மூன்று தினங்களாக பரவலாக பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.  நேற்றும் தமிழகம்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது.அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இன்னும் சற்று நேரத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் மிதமான மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.அதே நேரத்தில் 21 மாவட்டங்களில் இன்று மிதமானது முதல் கனமானது வரை  மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சேலம், நாமக்கல், மதுரை, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அசானி புயல்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன்காணப்படும். புறநகர் பகுதிகள், நகரின் சில பகுதிகளில்  லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..மே 7ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடலில் 'மோக்கர் புயலாக வலுவடையும் ஒடிசா மேற்கு வங்கம் நோக்கி புயல் நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. வடக்கு நோக்கி 'மோக்கா' புயல் தமிழக வளிமண்டலத்தில் நிலவும் ஈரப்பதம் ஈர்க்கப்பட வாய்ப்பு இதனால், தமிழகத்தின் வளி மண்டலத்தில் வறண்ட வானிலை உருவாகக்கூடும். இதன்காரணமாக தமிழகத்தில் 8ம் தேதிக்கு பிறகு இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு மழையும் படிப்படியாக குறையும்.வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு பல நாடுகள் பெயர் வைக்கின்றன அந்த வகையில் 2023ம் ஆண்டில் வங்கக்கடலில் உருவாக இருக்கும் புயலுக்கு பெயரிட்ட நாடு ஏமன்.  அந்நாடு சூட்டிய பெயர்  தான்”மோக்கா” . இதற்கு காஃபிக்கொட்டை என்றும் அர்த்தம் உண்டு.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web