சுத்தியலால் மனைவியை அடித்து கொலை ... கணவன் பகீர் வாக்குமூலம்!!

 
ஊர்மிளா

 
பாலக்காடு சித்தூர்  கம்பிளிசுங்கம் பகுதியில் வசித்து வருபவர்   உதயன். இவரது  மனைவி ஊர்மிளா.  கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர் உதயனிடம் விவாகரத்து பெற்று  கொழிஞ்சாம்பாறையில் உள்ள புத்தன்பாதையை சேர்ந்த குட்டன் (எ) சஜீசை   2வது திருமணம் செய்துள்ளார். இவர் கோழிக்கடைகளில் வேஸ்ட் கழிவு பொருட்கள் வாங்கி மீன் வளர்ப்பவர்களுக்கு விற்பனை செய்து வரும் தொழில்செய்து வருகிறார்.திருமணத்திற்கு பிறகு  இருவரும் கொழிஞ்சாம்பாறையில் வீடு எடுத்து வசித்து வந்தனர்.

சுத்தியல்

ஆனால் இவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டு வந்தது.  வெறுப்பாக   2ம் கணவரை பிரிந்த நிலையில் ஊர்மிளா 10 மாதங்களாக தாயாரின் வீட்டில் தங்கி  ஒரு தனியார் பீர் பாட்டில் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், மனைவியை சஜீஷ் அடிக்கடி போன் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.  
இதனால் கணவரின் போன் வந்தால் எடுப்பதை ஊர்மிளா தவிர்த்து வந்தார். இதனையடுத்து  ஏன் போனை எடுபதில்லை எனக் கேட்டு மே 18ம் தேதி ஊர்மிளாவின் வீட்டிற்கு சஜீஷ் சென்று அடித்து துன்புறுத்தியுள்ளார். அன்றும் கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.   இதற்காக அப்போது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சிறை தண்டனை அனுபவித்து சஜீஷ் கடந்த 3 மாதத்திற்கு முன் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

ஆம்புலன்ஸ்


 ஊர்மிளா நேற்று காலை வழக்கம் போல்  தாயார் வீட்டிலிருந்து வேலைக்கு செல்கின்ற நேரத்திற்காக சஜீஷ் காத்திருந்தார். வெளியே வந்ததும்  சஜீஷ் ஊர்மிளாவின் தலையில் சுத்தியால் அடித்து காயப்படுத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஊர்மிளாவை அப்பகுதி மக்கள் மீட்டு  மருத்துவமனையில் அனுமதித்தனர்.  அங்கு  ஊர்மிளா சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து கொழிஞ்சாம்பாறையில்  சஜீஷை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web