'விவசாயிகளின் மகன்களை அழகான பெண்கள் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க’ - எம்.எல்.ஏ. அதிர்ச்சி பேச்சு!

 
எம்.எல்.ஏ.

விவசாயிகளின் மகன்களை அழகான பெண்கள் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க. ஏனெனில் அழகான பெண்கள் நிரந்தரமான வேலையில் இருப்பவர்களைத் தான் திருமணம் செய்து கொள்ள விரும்புவாங்க’ என்று வருத்-மோர்ஷி தொகுதியின் சுயேட்சை எம்எல்ஏவான தேவேந்திர புயர் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

இது குறித்து வருத் தாலுகாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தேவேந்திர புயர், “ஒரு பெண் அழகாக இருந்தால், அவர் உன்னையும், என்னையும் போன்ற ஒரு நபரை திருமணம் செய்ய விரும்ப மாட்டார். அந்த பெண் வேலை செய்யும் ஒரு கணவனையே தேர்ந்தெடுப்பார். 

5வது திருமணம்

முதல் இரண்டு வகுப்பு பெண்கள் மளிகைக் கடை அல்லது பான் கியோஸ்க் நடத்தும் ஒருவரை திருமணம் செய்து கொள்வார்கள். மூன்றாம் வகுப்புப் பெண்களே விவசாயியின் மகனை திருமணம் செய்கிறார்கள்” என்றார்.

அத்தகைய திருமணத்திலிருந்து பிறக்கும் குழந்தைகள் நல்ல தோற்றம் இல்லாதவர்கள் என்றும் அவர் கூறினார். மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாருக்கு புயர் ஆதரவு தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் கல்யாணம் கும்பம்

காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சருமான யஷோமதி தாக்கூர், பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக புயாரை கடுமையாக சாடினார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!