இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே கோட்டை மலை காட்டுப்பகுதி கொம்புத்துறை கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா, சப் இன்ஸ்பெக்டர் ஜீவ மணி தர்மராஜ், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராமர், தலைமை காவலர்கள் இருதயராஜ் குமார் இசக்கி முத்து காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் இன்று அதிகாலை ரோந்து சென்றனர்.
அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக ஈச்சர் லோடு வாகனத்தில் பீடி இலைகள் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. போலீசாரைக் கண்டதும் அந்த வாகனத்தில் வந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அந்த வாகனத்தில் சுமார் 30 கிலோ வீதம் 68 மூட்டைகளில் 2250 கிலோ பீடி இலைகள் இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.60 இலட்சம் ஆகும். கைப்பற்றபட்ட பீடி இலைகள் மற்றும் வாகனம் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை கடத்த முயன்றவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!