பெங்களூரு: ஒரே நாளில் கொட்டித் தீர்த்த கனமழை... 133 ஆண்டுகளில் ஜூன் மாதத்தில் பதிவானதில் உச்சம்!

 
பெங்களூரு: ஒரே நாளில் கொட்டித் தீர்த்த கனமழை... 133 ஆண்டுகளில் ஜூன் மாதத்தில் பதிவானதில் உச்சம்!

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், பெங்களூரில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது, இதனால் கடலோர பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.


 

இன்றும் பெங்களூருவில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) பெங்களூரு மாநகரத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜூன் 5 ம் தேதி வரை பெங்களூருவில் மழை நீடிக்கும் என்று இந்தியா வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இந்நிலையில், பெங்களூருவில் கடந்த 133 ஆண்டுகளில் ஜூன் மாதத்தில் இல்லாத அளவுக்கு இந்த மாதத்தின் சராசரியான 110.3 மி.மீ மழையைத் தாண்டி, கடந்த இரண்டே நாட்களில் பெங்களூருவில் வரலாறு காணாத 140.7 மிமீ மழை பெய்து சாதனைப் படைத்துள்ளது.

பெங்களூரு: ஒரே நாளில் கொட்டித் தீர்த்த கனமழை... 133 ஆண்டுகளில் ஜூன் மாதத்தில் பதிவானதில் உச்சம்!

இந்தியாவின் சிலிக்கான் நகரமான பெங்களூருவில் ஜூன் 5ம் தேதி வரை மழை பெய்யும் என்று அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், மேலும் ஜூன் 8 மற்றும் 9ம் தேதிகளிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது. 

நேற்று ஜூன் 2ம் தேதி பெய்த மழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் தண்ணீர் தேங்கிய நிலையில், மெட்ரோ ரயில் சேவைகளும் தடைபட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஹெப்பல் அண்டர்பாஸ், கேஎப்சி ரோடு முதல் குஞ்சூர் ரோடு, சிக்கஜலா கோட் கிராஸ், பென்னிகனஹள்ளி ரயில்வே பாலம், ஹெப்பல் சர்க்கிள் ஆகிய இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web