பெங்களூர் ஐடி ஊழியர் அதுல் சுபாஷ் தற்கொலை வழக்கில் மனைவி உட்பட 3 பேருக்கு ஜாமீன்!

 
அதுல் சுபாஷ்
பெங்களூவை சேர்ந்த ஐடி ஊழியர் அதுல் சுபாஷ், மனைவி, மாமியாரால் மன உளைச்சலுக்குள்ளாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட இவரது தற்கொலை வீடியோ கடும் விவாதங்களைக் கிளப்பியது. 

அதுல் சுபாஷை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி வந்துள்ளனர். மேலும் மிரட்டி பணம் பறித்துள்ளனர். தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் என்று தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் கூறி கடிதம் எழுதி வைத்து விட்டு அதுல் சுபாஷ் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அதுல் சுபாஷ் மரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் வைரல் செய்தியாக மாறியிருக்கிறது.

அதுல் சுபாஷ்

இந்நிலையில் அதுல் சுபாஷின் மனைவி நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அதுல் சுபாஷின் சகோதரர் பிலாஸ் குமார் புகாரளித்தார். அவர்கள் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நிகிதாவைத் தேடி பெங்களூரு காவல்துறையினர் அவர் வசிக்கும் உ.பி.யிலுள்ள ஜான்பூருக்கு விரைந்தனர். அங்கு அவரின் வீடு பூட்டியிருந்ததால் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்த போது அவர்கள் குடும்பமாக முந்தைய நாள் இரவே வெளியே சென்றதாகக் கூறினர்.

தொடர்ந்து உள்ளூர் போலீசார் அவர்களைத் தேடி வந்த நிலையில் நிகிதாவை ஹரியானா மாவட்டத்தின் குருகிராம் நகரிலும், அவரது தாயார் நிஷா சிங்கானியா மற்றும் அவரது சகோதரர் அனுராக் சிங்கானியா ஆகியோரை உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் நகரிலும் வைத்து கடந்த டிசம்பர் 14ம் தேதி போலீசார் கைது செய்தனர்.

அதுல் சுபாஷ்

இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட அதுல் சுபாஷின் மனைவி நிகிதா சிங்கானியா மற்றும் அவரது மாமியார் நிஷா சிங்கானியா மற்றும் மைத்துனர் அனுராக் சிங்கானியா ஆகியோருக்கு பெங்களூரு சிவில் நீதிமன்றம் சனிக்கிழமை ஜாமீன் வழங்கியது.

விசாரணையின் போது, ​​நிகிதா தனது கணவருக்கு எதிரான துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை மறுத்து வந்துள்ளார். தானே  கணவரின் துன்புறுத்தலுக்கு ஆளானதாக உறுதிப்படுத்தினார். ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக அவரைப் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், பிரிந்து இருக்கும் போது பணத்திற்காக அவரைத் துன்புறுத்துவதாக கூறிய குற்றச்சாட்டு குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web