பெங்களூரு... மழை வெள்ளத்தில் ரூ.2,50,00,000 மதிப்பிலான நகைகள் அடித்துச் செல்லப்பட்ட துயரம்... கதறும் நகைக்கடை உரிமையாளர்!

 
வெள்ளம்

நாடு முழுவதுமே கோடை வெயில் வறுத்தெடுத்து வருகிறது. ரோட்டில் நடந்து சென்றால், தார் உருகி, கால்களில் ஒட்டிக் கொள்வது போல கொடுமை. வாகனத்தில் செல்லும் போது கருவிழி இரண்டும் வெளியே வந்து விழுவதைப் போன்ற அனல்காற்று. ஆனாலும், பெங்களூருவை மழை வாட்டி வதைக்கிறது. தொடர்ந்து கொட்டித் தீர்த்த அடைமழை பல உயிர்களையும் காவு வாங்கியிருக்கிறது. சுரங்கத்தில் நிறைந்து நின்ற தண்ணீரை கவனிக்காமல் காரில் சென்ற இளம்பெண் ஜலசமாதியான துயரம் எல்லாம் அரங்கேறியது.

தற்போது மழைநீர் வடிந்த நிலையில், இந்த  மழை தன் வாழ்வையே புரட்டிப் போட்டதைக் கதறுகிறார் நகைக்கடை உரிமையாளர் ஒருவர். சுமார் 2.5 ரூபாய் மதிப்பிலான நகைகள் இந்த மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறது.

தண்ணீர்

பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியில் இருந்த நகைக் கடை ஒன்றில் மழைநீர் புகுந்துள்ளது. இதில் கடையின் தரைத்தளத்தில் இருந்த சுமார் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.  

தண்ணீர்

கடையில் இருந்த சுமார் 80 சதவிகித நகைகள் வெள்ளத்தில் அடித்து சென்றதாக கடையின் உரிமையாளர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். நகைகளை மீட்பது தொடர்பாக மாநகராட்சியிடம் நகைக்கடை உரிமையாளர் உதவி கோரி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web