8 வது முறையாக உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருது.. மெஸ்ஸிக்கு குவியும் பாராட்டுக்கள்!!

 
மெஸ்ஸி

பிரபல கால்பந்து விளையாட்டு ஜாம்பவான்களில் ஒருவர் லியோனல் மெஸ்ஸி. இவர் அர்ஜென்டினாவை சேர்ந்தவர்.இவர்  கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி'ஆர் விருதை 8வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார். பிரெஞ்சு கால்பந்து இதழான 'பிரான்ஸ் ஃபுட்பால்'    1956 முதல் சிறந்த கால்பந்து வீரர்களுக்கான  பலோன் டி'ஆர் எனும் உயரிய விருதை வழங்கி வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான  பலோன் டி'ஆர் விருதுப் பட்டியலில் பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் ஆண்கள் பிரிவில் 30 பேர் இடம் பெற்று இருந்தனர். ஆகஸ்ட் 2022 முதல் ஜூலை 2023 வரையிலான காலகட்டத்தில் வீரர்களின் செயல்பாடுகளை கணக்கில் கொண்டு இந்த தேர்வு நடத்தப்பட்டது.  

மெஸ்ஸி

இதில் முதற்கட்ட வாக்கெடுப்பில் முன்னணி கால்பந்து வீரர்களான கெவின் டி ப்ரூய்ன், ஹாலண்ட், மெஸ்ஸி, எம்பாப்பே, ரோட்ரி  முதல் 5 இடங்களை பிடித்தனர். பின்னர் அதில் லியோனல் மெஸ்ஸி இந்த ஆண்டுக்கான பலோன் டி'ஆர் விருதை வென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது. பிரெஞ்சு வீரர் எம்பாப்பேக்கும்,  மெஸ்ஸிக்கும் இடையே தான் அதிக போட்டி இருந்தது. ஆனால், இறுதியில்  8வது முறையாக பலோன் டி ஆர் விருதை மெஸ்ஸி வென்று இருக்கிறார்.  கடந்த ஆண்டு கத்தாரில் நடந்த கால்பந்து உலகக்கோப்பை போட்டியில்  அர்ஜென்டினா  அணியின் கேப்டனாகவும், சிறந்த வீரராகவும் இருந்தார்  லியோனல் மெஸ்ஸி.

கால்பந்து போட்டிக்கான உயரிய விருதை 7 முறையாக வென்று லியோனல் மெஸ்ஸி சாதனை!!

அவர் 2022 கால்பந்து உலகக்கோப்பையில் ஏழு கோல்களை அடித்து இருந்தார்.  2009 ம் ஆண்டு  தொடங்கி  2010, 2011, 2012, 2015, 2019 மற்றும் 2021ல் இந்த விருதை வென்று இருக்கிறார்.   இதுவரை பலோன் டி'ஆர் விருதுக்கு அதிகமுறை பரிந்துரைக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை படைத்த  மெஸ்ஸி  தற்போது இந்த விருதை அதிகமுறை வென்ற வீரர் என்ற பெருமையையும்  இதன் மூலம் பெறுகிறார்.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web