”மிஸ் தமிழ்நாடு” அழகியை கைப்பிடிக்கும் காளிதாஸ் ஜெயராம்.... நிச்சயதார்த்த வீடியோ!!

 
காளிதாஸ் ஜெயராம்

பிரபல மலையாள நடிகர்களில் ஒருவர் ஜெயராம். இவர் தமிழ் திரைப்படங்களிலும் நடித்துப் புகழ் பெற்றவர். சமீபத்தில் பொன்னியின் செல்வனில் ஆழ்வார்க்கடியானாக நடித்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.   இவரது மகன் காளிதாஸ் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். தமிழில் ’மீன்குழம்பும் மண்பானையும்’ திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.


இளம் நடிகராக தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு   தாரிணி காளிங்கராயருடன்  திருமண நிச்சயதார்த்தம் நேற்று விமரிசையாக நடைபெற்றது.சமீபத்தில் வெளியான கமல்ஹாசன் படமான விக்ரம் படத்தில் கமலின்  மகனாக நடித்திருந்தார்.  ஓடிடி தளங்களிலும் காளிதாஸ் சிறப்பித்து வருகிறார். குறிப்பாக ’பாவ கதைகள்’ ஆந்தாலஜியில் சுதா கொங்கரா இயக்கிய ‘தங்கம்’ கதையில் சத்தார் என்ற பால் புதுமையராக தோன்றியதில் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.   தற்போது தனுஷ் இயக்கி நடிக்கும் அவரது 50வது படத்திலும் காளிதாஸ் நடித்து வருகிறார்.

காளிதாஸ் ஜெயராம்
 2019ல் ’மிஸ் தமிழ்நாடு’ அழகிப் போட்டியில் பட்டம் சூடியவர் தாரிணி காளிங்கராயர் . இவர் மாடல் உலகில் பிரபலமானவர் . நிறைய விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். காளிதாஸ் - தாரிணி காதல் தற்போது பெரியவர்கள் ஆசிர்வாதத்துடன் திருமணத்தில் முடிகிறது. இதற்கான  திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்றது. இருவீட்டார் மற்றும் திரைத்துறை பிரபலங்கள், நண்பர்கள், உறவினர்கள் புடைசூழ இந்த நிச்சயதார்த்த விழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டது.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web