உஷார் மக்களே... இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

 
5 மாவட்டங்களில் கன மழை

இன்று தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்போது தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை என தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை ஜூன் 6ம் தேதி கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையிலும், சென்னை புறநகர் பகுதிகளிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web