உஷார்... இன்று 4 மாவட்டங்களில் கனமழை... மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

 
அச்சச்சோ…!  இன்று இந்த மாவட்டங்களில் எல்லாம் வெளுக்க போகும் கனமழை!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியதில் இருந்தே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களிலும் பகலில் கடும் வெயில் சுட்டெரித்தாலும் மாலையில் மழை, இரவில் பனிமூட்டம் என வானிலையில் மாறுபாடு நிலவி வருகிறது. வளிமண்டல சுழற்றி தொடர்ந்து நிலவி வருவதால் மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்றும், தமிழகத்திற்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு,  சென்னை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நாகப்பட்டினம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நவம்பர் 17ம் தேதி வரை தமிழகத்தின் சில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மிதமான மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

நெல்லை மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகளில் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

அதேசமயம், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேகமூட்டத்துடன் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியசும் குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியசும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனி, மழை

மேலும், குமரிக்கடலில் மணிக்கு 35 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். தென்தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் கடும் காற்று வீசும் நிலையில், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!